அனோஜன்: மரண தண்டனை

ரஞ்சன் அருண் பிரசாத்

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - தற்போதைய நிலைமை என்ன?

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக அவரது சகோதரர் சிவராசா ஹம்சிதம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

எதிர்வரும் 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனுக்கு அந்த நாட்டு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நாள் முதல் தனது சகோதரனுடன் தொலைபேசியூடாக உரையாட முடிந்ததாகக் கூறிய அவரது சகோதரன், கடந்த சில தினங்களாக அவருடன் தொடர்புகொள்ள முடியாது இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், அனோஜன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடன் தொடர்புகொண்டதாகவும் அவர் கூறினார்.

”இரண்டு நாட்களாக தொலைபேசி எடுக்கவில்லை. முந்தைய நாள் இரவு அவரை அழைத்துச் சென்றுள்ளார்கள். அவர் நேற்று முன்தினம்தான் அழைத்தார்.

மரண தண்டனை கொடுக்கப்படும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்களாம்.

இந்தச் சிறைச்சாலையில் தொலைபேசி வசதிகள் இல்லையாம். அதனால், தொலைபேசியூடாகக் கதைக்க முடியாது என்றார். எல்லோருக்கும் இந்த விஷயத்தை கூறுமாறும் சொன்னார்.

அரசு செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யுமாறு சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்” என அவரது சகோதரன் சிவராசா ஹம்சிதன் தெரிவித்தார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில், 27 வயதான அனோஜன் பட்டப் படிப்பை நிறைவு செய்து, அதனுடன் தொடர்புடைய வேலைக்காகக் கடந்த ஆண்டு சௌதி அரேபியா நோக்கிச் சென்றிருந்தார்.

”அண்ணாவை நாட்டிற்கு அழைத்து வந்தால் மாத்திரமே போதுமானது. இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செய்து தரவேண்டும்,” என சிவராசா ஹம்சிதன் கோரிக்கை விடுக்கிறார்.

சௌதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?

இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது. இந்தப் பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள்.

கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்துவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அது நாட்டில் பாரிய பேசுபொருளானது.

இந்த நிலையில், குறித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நாய் மீது தான் அறியாமல் தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவித்த இளைஞர், பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பேசுபொருளாகி, பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டன.

இந்நிலையில், சிவலிங்கம் தொடர்பாகப் பதிவிடப்பட்ட பதிவொன்றில் இஸ்லாமிய நபர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில், அனோஜன் நபிகள் நாயகம் தொடர்பான பதிவொன்றை வெளியிட்டு, பிறகு குறுகிய நேரத்தில் அந்தப் பதிவை நீக்கியிருந்தார்.

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - தற்போதைய நிலைமை என்ன?

அவ்வாறு அனோஜன் வெளியிட்ட கருத்தை ஸ்கிரீன் ஷோட் எடுத்த சிலர், அதைப் பகிர்ந்து, மீண்டும் பேசுபொருளாக்கியிருந்தனர். அனோஜன் வெளியிட்ட பதிவு பின்னரான சந்தர்ப்பங்களில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பகிரப்பட்ட நிலையில், அந்த விஷயம் சௌதியில் முறைப்பாடு செய்யும் அளவுக்குப் பெரிதானது.

இவ்வாறான நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோவொன்றை வெளியிட்ட அனோஜன், தான் செய்ய தவறுக்குப் பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியிருந்தார். இதையடுத்து, சௌதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன், இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அனோஜன், சௌதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் தண்டப் பணமும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இவ்வாறு அனோஜனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அவரது பெற்றோர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக, சௌதி அரேபியாவில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, சௌதியில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நிலையில், அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு அடங்கிய ஆவணங்கள், அந்த நாட்டு நீதிமன்றத்தால் சௌதியிலுள்ள இலங்கை தூதரகத்திற்குக் கையளிக்கப்பட்டு, அந்த ஆவணம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - தற்போதைய நிலைமை என்ன?

இலங்கை தமிழரசு கட்சியினர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜாவை சந்தித்தனர்.

நாயை தாக்கிய நபருக்கு 100 ரூபா அபராதம்

சௌதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கும் நிலைமையை ஏற்படுத்தக் காரணமாக கல்முனை பகுதியில் நாயைத் தாக்கிய சம்பவம் அமைந்திருந்தது. அந்த நாயைத் தாக்கிய நபர், இலங்கையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் செல்ல முதலில் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 7ஆம் தேதி கல்முனை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சந்தேக நபராகக் காணப்பட்ட நபர், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவருக்கான தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம்,

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 100 ரூபா அபராதமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாத சிறைத் தண்டனையையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - தற்போதைய நிலைமை என்ன?

அனோஜனின் விடுதலையை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்புகளை பெற்றுத் தருமாறு இலங்கை தமிழரசு கட்சி, இலங்கைக்கான அமெரிக்க தூதரிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளது.

அனோஜனின் விடுதலைக்கான கோரிக்கை

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை அரச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள், சௌதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தக் கோரிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சர், கொழும்பில் உள்ள சௌதி அரேபிய தூதரகத்தின் பதில் பொறுப்பாளர், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவிக்கின்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தன.

இதேவேளையில், சௌதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள், சௌதி அதிகாரிகள் மற்றும் சௌதி அரேபியாயுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் முஸ்லிம் தலைவர்கள் அனோஜனின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தனர்.

அனோஜனின் விடுதலைக்குத் தேவையான முழு ஆதரவைத் தாங்கள் வழங்குவதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் தூராமித், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் உறுதி வழங்கியுள்ளார்.

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - தற்போதைய நிலைமை என்ன?

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபத் தலைவர் பாரத் அருள்சாமி, பொதுச் செயலாளர் பரணீதரன் முருகேசு உள்ளிட்டோர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜாவை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளையில், அனோஜனின் விடுதலைக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலையீடு செய்ய வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபத் தலைவர் பாரத் அருள்சாமி, பொதுச் செயலாளர் பரணீதரன் முருகேசு உள்ளிட்டோர்,

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜாவை சந்தித்து, இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தனர்.

சிவராசா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாகத் தலையீடு செய்து, சௌதி அரசாங்கத்தை நாடி கோரிக்கை விடுத்ததன் பின்னர், இந்த விஷயம் தொடர்பில் இந்தியா தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜா தெரிவித்துள்ளார்.

அதோடு, அனோஜனின் விடுதலையை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறு இலங்கை தமிழரசு கட்சி, இலங்கைக்காக இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஆகியவற்றிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்-ஜா, அமெரிக்க தூதரகத்தின் அரசியல், பொருளாதார ஆலோசகர் என்டனி வீ பிரினோட் ஆகியோரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனோஜனின் விடுதலையைக் கோரி, இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் போராட்டங்கள் மற்றும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - தற்போதைய நிலைமை என்ன?

அனோஜனின் குடும்பத்தாரை அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சந்தித்தார்.

இலங்கை அரசின் நடவடிக்கை

அனோஜனின் விடுதலைக்காக சௌதி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், அனோஜனின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனோஜனின் குடும்பத்தாரை அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தி இருந்ததுடன், அவரது விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தாம் எடுப்பதாகவும் உறுதி வழங்கியிருந்தார்.

அத்துடன், அனோஜனின் விடுதலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக, சௌதியிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

ශානිට, රවීට, සිරිල් ගාමිණී පියතුමාට එරෙහි පෙත්සම විසිවෙයි | සැලසුම නිවැරදිව කියවමු

Next Story

Asian Games Aichi-Nagoya 2026 Medal Tally as of September 29, 2026 (Day 10)