35 ஆண்டுகளாக வயிற்றில் குழந்தை: மூதாட்டி வயது 73 !

அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, ஒருவருக்கு சமீபத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவரின் வயிற்றை சோதனை செய்து பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் வயிற்றில் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறியுள்ளது. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் மூதாட்டி நடமாடி வந்துள்ளார்.

சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறியுள்ளது.  மருத்துவ உலகில் இவ்வறான கருவை லித்தோபிடியன் lithopedion என்று கூறுகிறார்கள். கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் அதை லித்தோபிடியன் lithopedion என் அழைக்கிறார்கள்.

இவ்வாறாக சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வறாக உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளியேறிவிடும். அடி வயற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்தும்.

இதுவரை உலகில் அதிகாரப்பூர்வமாக 290 பேருக்கு தான் இப்படியாக லித்தோபிடியன் lithopedion முறையில் கரு அவர்கள் வயிற்றில் வளர்த்துள்ளது. முதன்முதலாக 1582 ஆம் ஆண்டில் இதுபோல ஒரு பெண்ணின் வயிற்றில் கல் குழந்தை வளர்ந்துள்ளது. அந்த பெண் 82 வயதில் உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த மூதாட்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வயிற்றுக்குள் சென்ற கரு அடி வயற்றிகுள் சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் அங்கேயே வளர்ச்சியடைந்துள்ளது. பின்னர். சுமார் 7 மாதம் வளர்ந்த கரு பின்னர் வளர்ச்சியடையாமல் இருந்துள்ளது.

கரு முட்டைக்குள் குழந்தை இல்லாததால் அவருக்கு அந்த காலத்தில் மாதவிடாயும் சரியாக இருந்துள்ளது. ஆனால் உடல் எடை மட்டும் கூடியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக கூடியிருக்கும் என அவர் கருதிய நிலையில் தற்போது தான் அது குழந்தை என தெரியவந்துள்ளது.

வயிற்றுக்குள் இருந்த குழந்தை 7 மாதத்திற்கு பிறகு வளர்ச்சியடையாததால் அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் இந்த குழந்தையை வெளியே தள்ள முயற்சித்திருக்கும். அது முடியாத பட்சத்தில் இந்த குழந்தையை கல்லாக மாற்றியுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இது இவ்வளவு ஆண்டுகள் பாதிப்பை எதுவும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது வலியை ஏற்படுத்திய நிலையில் 35ஆண்டுகளுக்கு பிறகு இது கண்பிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

Previous Story

2022 முதல் அமைச்சரவைக் கூட்டம் :IMF கடன்பெறுவது ஆராய்வு 

Next Story

சோறு உண்பவர் யார்?