அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் போரில் மிகவும் பிசியாக இருக்கும் நிலையில், இந்த வருடம் கைப்பற்றிய வெனிசுலா-வில் புது நெருக்கடி உருவாகியுள்ளது.

அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக வெனிசுலா மீது தடை விதித்து வந்த காரணத்தால், உலக நாடுகளிடம் வர்த்தகம் செய்ய முடியாமல் தனித்து நின்றுக்கொண்டு இருந்தது.
இந்த நிலையில் வெனிசுலாவை தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபரை இரவோடு இரவாக கைது செய்த நிலையில், அந்நாட்டின் கச்சா எண்ணெய் வளம் அனைத்தும் அமெரிக்கா வசம் சென்றுள்ளது.
இந்த நிலையில் ஜனவரி கைப்பற்றலுக்கு பின்பு அமெரிக்க கருவூல அமைச்சகம் சில வெனிசுலா வங்கிகள் மற்றும் தனிநபர்களுடன் பரிவர்த்தனை செய்ய புதிய உரிமங்கள் வழங்கியுள்ளது. ஆனால் இது போதுமானதல்ல என்று ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க இந்த நடவடிக்கை போதாது என்பதே இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ். தற்போது வெனிசுலாவில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இப்படி அடுக்கடுக்கான பிரச்சனை இருக்கும் வேளையில் அமெரிக்காவின் இந்த மந்தமான செயல்பாடு அந்நாட்டு அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.
கடந்த ஜனவரி 3-ம் தேதி அமெரிக்க ராணுவம் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மாடுரோவை கடத்தி சிறையில் அடைத்த பிறகு, நான்கு மாதங்களுக்கு முன்பு ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றார். முன்பு மாடுரோவின் துணை அதிபராக இருந்த அவர், தற்போது டிரம்பின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனத்திற்கு பின்பு கச்சா எண்ணெய் மற்றும் கனிம வளங்களில் அமெரிக்காவுக்காக சில கட்டுப்பாடுகளை வெனிசுலா அரசு தளர்த்தியுள்ளது.
அரசியல் கைதிகளை விடுவிக்கும் பொது மன்னிப்புச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. இப்படி பல மாற்றங்களை செய்து வரும் வெனிசுலா அரசுக்கு அமெரிக்கா எவ்விதமான பொருளாதார ஊக்குவிப்பு உதவிகளையும் செய்யாமல் உள்ளது.
மதுரோ கைதுக்கு பிறகு அமெரிக்கா வெனிசுலாவுடன் உறவுகளை மீண்டும் வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகாஸில் அமெரிக்கா தனது தூதரகத்தை மீண்டும் திறந்துள்ளது. எண்ணெய் துறை உள்ளிட்ட சில துறைகளில் தடைகளை படிப்படியாக தளர்த்தியுள்ளது.
வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியின் வருமானம் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மத்திய வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகளுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது உலக நாடுகள் உடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இது போதுமானதாக இல்லை என்பதை டெல்சி ரோட்ரிக்ஸ் வாதம்
வெனிசுலா பொருளாதார மற்றும் வர்த்தக தடைகள் இல்லாத சூழலை உருவாக்கினால் மட்டுமே பொருளாதார மீட்சி சாத்தியம் என்று டெல்சி ரோட்ரிக்ஸ் வலியுறுத்தி வருகிறார்.
இந்த விவகாரம் அடுத்த சில வாரங்களில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





