‘ஈரானை கற்காலத்திற்கே தள்ளிச் செல்வோம்’…!..?

Iriz shaheed + Shaheed Rizwan

‘ஈரானை கற்காலத்திற்கே தள்ளிச் செல்வோம்’ என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் கொக்கரிப்புக்கு, ஈரானின் வெளிநாட்டமைச்சர் தமது பண்டைய நாகரீக வரலாற்றை சுட்டிக் காட்டி நாகரீகமான முறையில் கொடுத்துள்ள பதிலடியே இன்று உலகெங்கும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Iran Explained in 14 Minutes | History, Geography, Culture

‘நீங்கள் நெருப்பைத் தேடிகுகைகளில் வாழ்ந்த காலத்தில், நாங்கள் சைரஸ் சிலிண்டரில் மனித உரிமைகளை செதுக்கிக் கொண்டிருந்தோம்’ இந்த வார்த்தைகளின் தாத்பரியத்தை புரிந்துகொள்ளும் அளவுக்கு ட்ரம்ப்புகள் இன்னும் வளரவே இல்லை என்பதுதான் இங்கு நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

May be an image of text that says 'IRAN FM: ආපය PRRAUA WE ARE WAITING FOR THEM Today News... ...best in news'

என்னதான் மேற்கு மீடியாக்கள் ஈரானை காட்டு மிராண்டிகளாக காட்டப் பார்த்தாலும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி அங்கு ஒரு செலிப்ரிட்டியாகவே கொண்டாடப்படுவது இந்த மாதிரியான கவுண்டர்களால் தான்.

மற்றது இவரது தோற்றம், பேச்சு, வசீகரமான புன்னகை சியோனிஸ்ட்டுகளுக்கு வயிற்றில் புளியை கரைப்பது போலவே அமேரிக்க, ஐரோப்பிய மக்களின் தூக்கத்து கலைத்து அவர்களுடைய க்ரஷஷக மாற்றியிருப்பதும் தான்.

For thousands of years the world knew it as Persia — one of the most powerful empires in human history. Long before Rome… before modern Europe… before America even existed… Persian kings

ஈரான் தன்னுடை 5000 வருடத்துக்கு மேலான நாகரிக வளர்ச்சியை வெறும் கட்டடங்களிலும் கலைகளிலும் மாத்திரமின்றி தமது அரசியல், ராணுவ அதிகாரிகளின் தகைமைகளிலும் காட்டிவருவதுதான் ஆக்கிரமிப்பாளர்களை கலவரமடைய செய்திருக்கிறது.

கொல்லப்பட்ட ஈரானிய இராஜதந்திரி லரிஜானியின் ‘பயோடேட்டா’ மாத்திரமின்றி தற்போது ராணுவ பேச்சாளராக இருக்கும் எப்ராஹிம் சொல்பஹாரியின் பெயருக்கு பின்னால் இருக்கும் தகமைகள் அனுமார் வால் போல நீண்ட நெடியதாக இருக்கிறது.

(அதேசமயம் war cabinet பேச்சாளராக இருக்கும் Peter Hegseth ஐ பார்க்கும் போது ரணிலின் ஆஸ்தானபேச்சாளரான ஹர்ஸ அபேவர்தன ஞாபகத்துக்கு வந்துn தாலைக்கிறார்)

யுத்தகாலங்களில் ராணுவபலம், உளவுத்துறை எந்தளவு முக்கியமோ அந்தளவுக்கு வெளியுறவும் ராணுவ பேச்சாளர்களின் ஆளுமையும் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். இல்லாட்டி ட்ரம்பைபோல சீரியசான நேரத்துல சிரிக்க வச்சிடுவாங்க.

அதே சமயம் உலக அளவில் ஈரானின் இன்னொரு பரிமாணத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி வரும் இன்னொருவரையும் கோடிட்டுக் காட்டாமல் இந்தகட்டுரை முழுமைபெறாது எனநினைக்கிறேன்.

ஆம்! அவர்தான் Professor Mohammed Marandi. இவர் அமெரிக்காவில் பிறந்து தெஹ்ரான் யுனிவர்சிட்டியில் பேராசிரியராக இருப்பவர். இவரின் ஆங்கில மொழிபுலமை மூக்கில் விரல் வைத்துவிடக் கூடியது, லாஜிக்காக அவர் வாதம் செய்யும் விதம்? ஈரானை நோக்கிய உலகப் பார்வையையே மாற்றியிருக்கிறது எனலாம்.

BBC, CNN, C4  மாத்திரமின்றி பல யூட்யூப் சேனல்களிலும் கேள்விகளை மழுப்பாமல் விளக்கும் லாவகம், எதிரணியை குறிப்பாக யூத சார்பு மீடியாக்களுக்கு இவரின் சாட்டையடிகள் தாறுமாறாக இருக்கும்.

இவரின் வாதத்தால் மூக்குடைப்பட்டு நொந்து நூடில்சான உலகத்தரம் வாய்ந்த ஜர்னலிஸ்ட்டுகளின் லிஸ்ட் ரெம்பவும் நீண்டது. குறிப்பாக Piers Morgan  போல யாருமே அம்பானக்கி திண்டிருக்க மாட்டாங்க.

ஆனாலும் டாக்டர் மராண்டியையே திரும்ப திரும்ப அழைத்து வாங்கிக் கட்டிக் கொள்வது வழக்கமாக கொண்டிருப்பார்கள். காரணம் அவர் சம்பந்தப்பட்ட நேர்காணல்களுக்கு இருக்கும் மவுசு.

‘யாரோ பத்து பேர அடிச்சிடான் ஆகலடா நானு, நான் அடிச்ச பத்துபேரும் டான்…ரா’ என்ற KGF டயலாக் இவருக்கு பக்காவா பொருந்தும்.

“You messed with the wrong country”

“Epstein’s war”

“You picked the wrong fight”

“We will fight until the last man”

இதெல்லாம் மராண்டியால் வீசப்பட்ட வெறும் வார்த்தைகளல்ல, 24 கேரட் உளவியல் யுத்தம். Shahed  136 ட்ரோன் போல மிகவும் சிம்பலானது. ஆனா சேதாரம் ரெம்ப பலமா இருக்கும். எதிரியின் ஜட்டியை ஈரமாக்கும் புன்னகையோடு விடும் மிரட்டல்கள் அவை. (வீடியோ சாம்பல் முதல் காமண்ட்டில்)

ஈரான் ஹைப்பர்சோனின் மிசைல், ட்ரோன்களை மாத்திரம் உற்பத்தி செய்யவில்லை. மீடியாவில் ஒலிக்க வேண்டிய குரல்களும் எப்படியான அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதையும் நன்கறிந்தேn சயல்பட்டு வந்துள்ளது.

கிரேக்கர்கள் முதல் ரோமானிய, மங்கோலியர் வரை படையெடுத்து தோல்வியை மட்டுமே சுவைக்க வைத்த பாரம்பரியம் பாரசீகத்துக்குறியது. சியானிசம் பல்பு வாங்கி அழிவை எதிர்நோக்கப் போவதும் இங்கிருந்துதான். அதற்கான அடித்தளத்தையிட்ட பாலஸ்தீனமே முடிவுரையும் எழுதும்.

Previous Story

පාස්කුවේ ප්‍රධාන කුමන්ත්‍රණකරු තාම නිදැල්ලේ

Next Story

Araghchi Warning Goes Viral As Trump Seeks Iran Peace Talks |