27 கோடிப்பேர் நெகிழ்ந்த வீடியோ!

நஜீப்

நன்றி: 28.03.2026 ஞாயிறு தினக்குரல் 

China 7 Dogs Story: China: Your favourite internet story of 7 dogs returning home isn't true – it's not fake either | World News - The Times of India

வடகிழக்கு சீன-சன் சுன் ஹி அதிவேக வீதி கடும் குளிரான காலநிலை. அங்கு ஏழு நாய்களின் செயல்பாடுகள் அதனை அவதானித்த ஒருவருக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

அதனை வீடியோ எடுத்தவர் அது பற்றி தேடிப்பார்க்க இறைச்சிக்காக எடுத்து செல்லப்பட்ட எழு நாய்களும் அங்கிருந்து தப்பிய கதை இதன் பின்னணி.

(வீடியோ அனுப்பியவர்-அம்ரா லுத்பான்)

சீனாவில் நாய் இறைச்சி விற்பனை சர்வசாதாரணம். இப்படி இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட நாய்கள்தான் அவை. கடும் குளிரிலும் அந்த ஏழு நாய்களும் மிகவும் ஐக்கியமாக ஒருவரை ஒருவர் பாதுகாத்து உதவிக் கொண்டு உணர்வுபூர்வமாக வீதி வழியே தப்பி ஓடும் காட்சிதான் இது.

அந்த நேரம் காசாப்புக் கடையிலிருந்து பதினேழு கிலோ மீற்றர்கள் வரை அவை தப்பி இருந்தது. வீடியோ எடுத்தவர் ஒரு குறிப்புடன் இதனை பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்து நெகிழ்ந்தவர்கள் 270 மில்லியன். இது திரைப்படமாகலாம் என்றும் பேசப்படுகின்றது.

Previous Story

"TVK பெண்கள் விபச்சாரிகள்"

Next Story

ඇමරිකාව වසර 80ක් තිස්සේ නොදුටු ප්‍රතිවාදියා හමුව ඇත !