நஜீப்
நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல்
1.சஜித் ஒரு அரசியல் தலைவரே கிடையாது. நாம் இணைந்தாலும் அவர் எங்களை பலிவாங்குவார். ஆக நாமல் மேலானவர்-ராஜித
2.கடந்த வாரம் நாமல் சஜித்துக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அவர் அதற்கு பதில் வழங்கவில்லையாம்.
3.ஐதேக-நவினும் சம்பிக்கவும் சந்திக்க, சம்பிக்க சஜித்தை நிறையவே திட்டினாராம். நவின் சஜித்திடம் அப்படியே கொட்டிவிட்டாராம்.
4.ரணில் மனைவிக்காக லண்டன் போனது உத்தியோக அழைப்பில் இல்லையாம். இதை ஜனாதிபதி செயலாளர் திலிப அறியாராம்!
5.திஹாரி மதரசா விழாவுக்கு மொட்டு-நாமலை அழைத்ததால் கடும் விசனம். இதற்கு ஏற்பாட்டாளரர் தரும் விளக்கம் சமூகம் ஏற்பதாக இல்லை.
6.மீண்டும் தொகுதி முறையில் தேர்தல். அதற்குள்ளும் ஒரு விகிதாசாரப்பிரதிநிதித்துவம் பற்றிய கருத்துக்களும் சிபார்சில் இருக்கிறதாம்.
7.வீரவன்சாவுக்கு நந்தன குனதிலக மரணம் மட்டுமல்ல சோமவன்ச மரணத்திலும் சந்தேகமாம். அடா கடவுளே என்ன அரசியல் இது!



