-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு
தற்போது 341 உள்ளாட்சி சபைகளில் 339க்கு தேர்தல் நடக்கின்றது. எல்பிட்டிய தேர்தல் ஏற்கெனவே முடிந்து விட்டது. (அதில் 17 வட்டாரங்களில் 15 வட்டாரங்கள் NPP. வசம். மொத்த ஆசனங்கள் 30.) அதே போன்று சட்டச் சிக்கல் காரணமாக கல்முனை நகர சபைக்கு தேர்தல் அறிவிப்புச் செய்யப்படவில்லை. எனவே 339 சபைகளுக்கு வரும் மே 6ல் தேர்தல்.
இதில் 300 வரையிலான வட்டாரங்களை NPP. கைப்பற்ற முடியும் என்பது நமது கணக்கு. சஜித் அணியினர் 100க்கும் குறையாத சபைகளைத் கைப்பற்றுவோம் என்று பேசினாலும் அவற்றின் பட்டியலை எவரும் வெளியிடவில்லை.
இவர்கள் கொழும்பு மற்றும் கண்டி மா நகர சபைகளில் ஒரு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். ஆனால் இது கல்லில் நார் உறிக்கும் ஒரு முயற்சி. அத்துடன் அது ஒரு சம்பிரதாய எதிர்பார்ப்பாகத்தான் நாம் பார்க்கின்றோம்.
இந்தத் தேர்தல் தோல்வியுடன் (SJB) சஜித் தலைமைத்துவத்துக்கு எதிரான ஒரு போராட்டம் கட்சியில் நடக்க இருக்கின்றது என்பதனையும் நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம்.





