30-30அமைச்சரவை: திக்…திக்…கணங்கள்!!

யாருக்கெல்லாம் வாய்ப்புக்கள்!

என்ன 30-30 கிரிக்கட்டும் வந்து விட்டதா என்று எண்ணி விட்டீர்களா! அப்படி ஒன்றும் இல்லை. இன்று திகதி 08.01.2022. இலங்கை நேரம் மாலை ஆறு மணி. இன்னும் முப்பது மணி நேரங்களில் அதாவது திங்கட் கிழமை இலங்கையில் அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கான அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அத்துடன் இந்த அமைச்சர் எண்ணிக்கை 30 தைத் தாண்டாது என்றும் ஜனாதிபதி ஜீ.ஆர். கூறுகின்றார்…! அதனால் தான் நாமும் 30-30 என்ற தலைப்பில் சில தகவல்களை சொல்லலாம் என்று நினைக்கின்றோம்.

கண்டி-தலாதா மாளிகைளில்  தனது முதல் அமைச்சரவையை அன்று அறிமுகம் செய்து வைத்தபோது ஆறு மாதங்களில் மீள் பரீசிலனை இருக்கின்றது என்ற சொல்லி இருந்தார் ஜனாதிபதி.

ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. சுகாதார தேவி பவித்தராவை மாற்றி அந்த இடத்துக்கு கெஹல்லிய ரம்புக்கெலவை ஜனாதிபதி சுகாதாரத்துக்கு நியமனம் பண்ணினார். அது போல ஓரிரு மாற்றங்கள் மட்டும்தான்.

ஊடகத்துக்கு பொறுப்பாக டலஸ் அலகப்பெரும குறிப்பிட்ட பதவியை விரும்பாத போதும் ஜனாதிபதி பொறுப்பை கையில் கொடுத்தார்.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் சகோதரர்களின் ஆதிக்கம் இருந்தாலும் ஜனாதிபதி, நிதி அமைச்சர் ஆதிக்கம்தான் மேலோங்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. நாமலும் இதில் தலையைப் போட இடமிருக்கின்றது.

இராஜாங்க அமைச்சை வைத்திருப்வர்கள் கொபினட் எதிர் பார்ப்பதும் துணையை வைத்திருப்பவர்கள் முழு அமைச்சை எதிர் பார்ப்பதும் பின் வரிசைக்காரர்கள் ஏதாவது கிடைக்காதா… என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்கள். இப்போது எல்லோரும் கடைசி நேர ஓட்டங்களில் கொழும்பில் தான் இருக்கின்றார்கள்.

கெபினட் அமைச்சர்களை எதிர்பார்ப்பவர்களில்…

திலும் அமுனுகம முன்னணியில் இருக்கின்றார்.

எஸ்.பி. க்கும் பதவி உயர்வுக்கு வாய்ப்புக்கள்.

திஸ்ஸ குட்டி, நிமல் லன்சா போன்றவர்களுக்கு இராஜாங்க அல்லது துணை அமைச்சு எதிர்பார்ப்புக்கள்.

சிறுபான்மை சமூகத்தில்

திகாமடுல்ல ஹாரிசுக்கு ஒரு இராஜாங்க அமைச்சு+…வாய்ப்பு.

மட்டக்களப்பில் ஹபீஸ் நசீருக்கு துணை அமைச்சு.

திருமலை தௌபீக் அல்லது அணுராதபுரம் இஷாக் ராஹ்மானுக்கு துணை அமைச்சு கிடைக்கலாம்.

மலையகத்திலும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது சின்னவர் தொண்டா பச்சை கொடி காட்டினால் ஓகேயாம்..

இன்னும் 30 மணி நேரம் பொறுத்திருப் போம்…!

Previous Story

உகண்டா போன பொதி என்ன?

Next Story

அரபுக் கல்லூரி சுற்றுநிருபம்: கண்டிப்பான விதிமுறைகள்