3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதல்..

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் திடீரென நடத்திய வான்வெளி தாக்குதலில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.

Pakistani-Afghan conflict fears grow as border clashes multiply - Nikkei Asia

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகள் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையால் ஆப்கானில் உள்ள டிடிவி தாலிபான் அமைப்புடன், பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக மோதலில் இறங்கியது.

ஒருகட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதலில் இறங்கியது. இதில் டிடிவி தாலிபான் அமைப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sibghatullah, Haroon and Kabeer (L-R)

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். ஆப்கானின் இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 58 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

பாகிஸ்தானின் விமானப்படையை தாக்கியதாக ஆப்கானிஸ்தான் கூறியது. மறுபக்கம் பாகிஸ்தான் தாக்குதலில், ஆப்கானில் சில பொது மக்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 3 கிரிக்கெட் வீரர்கள் பலி போர் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

Pakistan-Afghanistan Conflict Highlights: Afghan minister warns Islamabad, 'If peace efforts don't succeed…' | Today News

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டு ராணுவ உடைகளுடன் சுற்றுவது, அவர்களின் போர் வாகனத்தை ஊருக்குள் ஓட்டுவது போன்ற வீடியோ வெளியிடும் செயலில் ஆப்கானிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் உர்குன் மாவட்டத்தில், பாகிஸ்தான் திடீரென வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா, ஹாரோன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் 7 பொதுமக்கள் உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

Pakistan. -Afghanistan clashes, Islamabad needs to introspect why it is a  bad neighbour - JK News Today

கிரிக்கெட் வாரியம் முடிவு இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள், உள்ளூரில் நடந்த போட்டிக்கு பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்- இலங்கை நாடுகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நடவடிக்கையால் முத்தரப்பு தொடரை புறக்கணிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ரஷீத்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Previous Story

NPP.முதல்வர்கள் ஓகேயாம்!

Next Story

வேட்பாளர்களிடம் பொலிஸ் அறிக்கை.. நாமலின் அதிரடி முடிவு!