வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளையில் பாகிஸ்தான் கைப்பாவையாக இருக்கும் ஜமாத் இ இஸ்லாமி 2வது இடம் பிடிக்கும் என்றும், மாணவர் அமைப்பினர் தொடங்கிய என்சிபி கட்சிக்கு 2 சதவீத ஓட்டு தான் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் தேர்தலில் களமிறங்கி உள்ளன. தற்போது வங்கதேசத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வந்தாலும் கூட தேர்தல் பணிகளை கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு மறைந்த பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி, பாகிஸ்தான் கைப்பாவையாக இருக்கும் ஜமாத் இ இஸ்லாமி எனும் மத அடிப்படைவாத கட்சி, மாணவர்களின் என்சிபி கட்சி மற்றும் ஜாதியா கட்சிகள் இடையே வங்கதேசத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் என்சிபி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நஹித் இஸ்லாம் உள்ளார். ஹசீனா ஆட்சிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த நபர்களில் இவர் முக்கியமானவர். இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஏஎஸ்டி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பு கடந்த டிசம்பர் 20 முதல் ஜனவரி 1 வரை நடத்தப்பட்டது.
வங்கதேசத்தில் உள்ள 300 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து 20,495 பேரிடம் நேரடியாக தகவல்கள் கேட்டு கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
அதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தும் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு சுமார் 790 சதவீத வாக்காளர்கள் ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு 19 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்களின் என்சிபி கட்சிக்கு 2.6 சதவீத வாக்காளர்களும், ஜாதியா கட்சி 1.4 சதவீத வாக்காளர்களும் ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருத்து கணிப்பில் ஆச்சரியமான முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த கட்சியினர் அதிகளவில் பிஎன்பி கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். வங்கதேச அரசியலில் பிஎன்பி கட்சி மற்றும் அவாமி லீக் ஆகியவை தமிழ்நாட்டில் திமுக – அதிமுக போன்று இருபெரும் கட்சிகளாகும்.
இவை இரண்டும் தான் மாறி மாறி கடந்த 40 ஆண்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. ஆனால் தற்போது அவாமி லீக் கட்சியினரை சேர்ந்த 60 சதவீதம் பேர் பிஎன்பி கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். அதேவேளையில் 25 சதவீத அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி எனும் மதஅடிப்படைவாத கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன.

வங்கதேசத்தை எடுத்து கொண்டால் நம் நாட்டுக்கு ஆதரவாக அவாமி லீக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா தான் இருந்தார். தற்போது அவர் நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவரது கட்சியும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார். அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்துக்கள் குறிவைத்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை முகமது யூனுஸ் தடுக்க தவறி வருகிறார்.
பிஎன்பி கட்சி வென்றால் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தான் பிரதமர் ஆவார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இதனால் அவரது கட்சி கருத்து கணிப்புகளில் முன்னிலை பெறுவது INDIAக்கு ஓரளவு சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் , ஜமாத் இ இஸ்லாமி மாணவர்களின் என்சிபி கட்சி என்பது INDIAக்கு முற்றிலுமாக எதிர் நிலைப்பாடு கொண்டவை. ஜமாத் இ இஸ்லாமி மத அடிப்படைவாத கட்சி. தற்போது பாகிஸ்தான் உளவுத்துறையின் அறிவுரையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியில் இருந்து இறக்கியதற்கு மாணவர்கள் போராட்டம்-வன்முறை தான் காரணம். மேலும் தற்போது அவர்கள் கட்சி தொடங்கி எதிரான பொய்களை பரப்பி வருகின்றன.
இதனால் இந்த 2 கட்சியினரை ஒப்பிடும்போது பிஎன்பி கட்சி வங்கதேசத்தில் வென்றால் அது ஓரளவு INDIAக்கு நாட்டுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.





