நஜீப்
நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல்
நடந்து முடிந்த பேரழிவை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும் பணிகளும் துவங்கி இருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதலை நடாத்தி சிலர் ஆட்சியைக் கைப்பற்றி இருந்ததற்குச் சமாந்திரமான ஒரு வேலையாகத்தான் இதனை பார்க்க வேண்டி இருக்கின்றது.
நீர்த்தேக்கங்களில் கதவுகளைத் திறப்பதும் மூடுவதும் அரச தலைவர்கள் வேலை கிடையாது. அதற்காக பணியில் இருக்கின்ற பொறியியலாளர்கள் தொழில்தான் அது.
அதே போன்று காலநிலை முன்னறிவிப்புப்பற்றிய தகவல்களை மக்களுக்குச் சொல்வதும் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியும் ஒழுங்கு விதியும். அவை கூட இந்தப் பேரழிவுபற்றிய தகவல்களை துல்லியமாக சொல்லவில்லை. அது வேறு கதை.
அது அப்படி இருக்க சிரேஸ்ட அரசியல்வாதி கபீர் ஹாசிம் கொத்மலையை திடீரென்று திறந்ததால் கம்பளையில் மட்டும் இறப்புக்கள் ஆயிரத்துக்கும் மேல் என்று சொல்லி இருந்தார்.
இது அபாந்தமானது நயவஞ்சகமானது என்பது இப்போது உறுதியாகியுள்ளது. ஒட்டு மொத்த மனித இழப்புக்கள் எட்டுநூறு (800) வரையே.!





