-நஜீப்-
நன்றி 23.11.2025 ஞாயிறு தினக்குரல்
நமது தேர்தல் ஆணையாளர் சமன்சிரி ரத்னாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றிருக்கின்றார். அப்போது அவர் அதிரடியான ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கின்றார்.
ரணில் ஜனாதிபதியாக இருந்த நாட்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடாத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்குச்சீட்டுகள் கூட அச்சிடப்பட்டிருந்தது.
‘தேர்தலா யார் சொன்னது அதற்கெல்லாம் எங்கு காசு இருக்கின்றத” இப்படிக் கேள்வி எழுப்பி இருந்தார் ரணில்.! அச்சடிக்கபட்டிருந்த வாக்குச்சீட்டுக்களை தான் அச்சகத் திணைக்களத் தலைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் அதனை தனக்கு கையளிக்கவில்லை.
அது கிடைத்திருந்தால்தான் தபால்வாக்களிப்பை நிச்சம் நடத்தி இருப்பேம். இந்த நேரத்தில்தான் எனக்கு கொலை அச்சுருத்தல் வந்தது. இதனை நான் வெளியில் சொல்லவில்லை. ஆனாலும் பொலிசில் முறைப்படு செய்திருந்தோன்.
பின்னர் எனக்குத் தெரியவந்தது கொலை அச்சுருத்தல் விடுத்தவர் ரம்புக்கனையைச் சேர்ந்த ஒரு இரணுவ அதிகாரி என்பது.!





