சஹ்ரான் மம்ந்தானி: நியூயார்க் மேயராக முஸ்லிம் தேர்வு!

சொந்த ஊரையே மம்தானியிடம் பறிகொடுத்த  டிரம்ப்

Woman in black dress stood next to man in suit and tie, behind a mic

டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவர் முன்னுள்ள சவால்கள்!

நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்கா

அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஹ்ரான் மம்தானி பல வகையிலும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தின் இளைய மேயர், அதன் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற சிறப்புகளை அவர் பெறுகிறார்.

முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் கர்டிஸ் சில்வா ஆகியோரை எதிர்த்து அவர் பெற்றுள்ள வெற்றி குறிப்பிடத்தக்கது.

அதற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிகளில் பலர் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இளமை, ஆளுமை மற்றும் அவரது தலைமுறைக்கே உரித்தான சமூக ஊடக இணக்கம் ஆகியவற்றை அவர் கொண்டிருக்கிறார்.

அவரது இனம் கட்சியின் அடித்தளத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு அரசியல் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. அத்துடன், இலவச குழந்தை பராமரிப்பு, பொது போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் தடையற்ற சந்தை கட்டமைப்பில் அரசாங்க தலையீடு போன்ற இடதுசாரி கருத்துகளை அவர் ஆதரித்துள்ளார்.

நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்கா

சமீபத்தில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு முன்னுரிமையாக இருந்த பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் திறனையும் மம்தானி வெளிப்படுத்தியுள்ளார். அவர் இடதுசாரிகளின் கலாசாரக் கொள்கைகளை மறுக்கவில்லை.

ஆனால் பரந்துபட்ட அமெரிக்காவில் இத்தகைய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாதவர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தன்னைத் தானே சோசலிஸ்ட் என்று கூறிக் கொண்டவரை ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி முகமாக குடியரசுக் கட்சியினர் மாற்றியுள்ளனர். ஆனாலும், செவ்வாய்க்கிழமை இரவு நியூயார்க் நகரில், அவர் ஒரு வெற்றியாளராக இருந்தார்.

Image

மேயர் தேர்தலில் மம்தானியின் பரப்புரை மிகப்பெரிய அளவில் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கான மேயர் தேர்தலைக் காட்டிலும் ஒருவேளை இது அதிகமாக இருக்கலாம்.

மேயராக, அவரது வெற்றிகள் மற்றும் தோல்விகள் உன்னிப்பாக ஆராயப்படும் என்பதையும் இது குறிக்கிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரத்தின் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் ஒரு தளத்தில் மேயர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் டி ப்ளாசியோ வெற்றி பெற்றார்.

Democratic candidate for New York City mayor Zohran Mamdani hugs his mother Mira Nair

மம்தானியைப் போலவே, இடதுசாரி அமெரிக்கர்களும் அவரது நிர்வாகம் திறமையான தாராளமய நிர்வாகத்திற்கு ஒரு தேசிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இருப்பினும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகிய டி ப்ளாசியோ பரவலாக பிரபலமடையவில்லை. புதிய கொள்கைகளை செயல்படுத்த தனது மேயர் அதிகாரத்தின் வரம்புகளுடன் அவர் போராட வேண்டியிருந்தது.

மம்தானியும் அதே வரம்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.

Image

சக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மம்தானியின் லட்சிய திட்டங்களுக்கு நிதியளிக்க வரிகளை உயர்த்துவதை எதிர்க்கிறேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

போதுமான நிதி இருந்தாலும், மம்தானியால் ஒருதலைப்பட்சமாக திட்டங்களை செயல்படுத்த முடியாது.

நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்கா

ஆனால் அதெல்லாம் பிற்காலத்திற்கான பிரச்னை. இப்போதைக்கு, பொது வெளியில் தமது பிம்பத்தை வரையறுக்கும் பணியை தனது எதிரிகளுக்கு முன்பாக மம்தானி தொடங்க வேண்டும்.

பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு, அமெரிக்க மக்களில் 46% பேர் நியூயார்க் மேயர் தேர்தலை “நெருக்கமாகப் பின்தொடரவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளது. இது மம்தானி மற்றும் அமெரிக்க இடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பையும் சவாலையும் வழங்குகிறது.

அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் உள்ள பழமைவாதிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை ஒரு சோசலிச அச்சுறுத்தலாக சித்தரிக்க முயற்சிப்பார்கள். “அதன் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கு அழிவைக் கொண்டுவரும், நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆபத்தை ஏற்படுத்தும்” என்று அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கலாம்.

ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஊதிப் பெருக்கி, ஒவ்வொரு எதிர்மறை பொருளாதார குறிகாட்டியையும் அல்லது குற்ற புள்ளிவிவரத்தையும் அவை முன்னிலைப்படுத்தும்.

நியூயார்க்குடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்ட டிரம்ப், மம்தானியுடன் ஒரு அரசியல் மோதலை வரவேற்பார் என்பது உறுதி. புதிய மேயரின் வாழ்க்கையை சிக்கலாக்க அவருக்கு ஏராளமான வழிகள் உள்ளன.

நியூயார்க் மேயர், மம்தானி, டிரம்ப், அமெரிக்கா

இருப்பினும், மம்தானிக்கு உள்ள வாய்ப்பு என்னவென்றால், பிரசாரத்தின் போது அவரது அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற அவரது கடந்த காலம் அவருக்கு சுமையாக இல்லை.

ஜனவரியில் அவர் பதவியேற்கும் போது, ​​புதிதாக அரசியல் நற்பெயரை உருவாக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அவருடன் டிரம்ப் பகைமை கொண்டால் மம்தானிக்கு அவர் ஒரு பெரிய தளத்தை வழங்குவதாக அமையும்.

மம்தானியின் அரசியல் திறமையும் திறன்களும் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளன. இது சிறிய சாதனையல்ல. ஆனால் வரும் ஆண்டுகளில் அவருக்கு காத்திருக்கும் சோதனைகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.

 

Previous Story

කිලිනොච්චියේදී STF එකට ප්‍රහාරයක් - වත්තල ඔගස්ටින්ගේ ඇත්ත මෙන්න

Next Story

இந்தியா-பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ராணுவ பயிற்சி!