சவுதி கிராண்ட் முஃப்தி”-யாக நியமனம்!
சவூதி அரேபியாவின் புதிய தலைமை முஃப்தியாக ஷேக் சலே பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் ஷியா முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ள ஷேக் சலே பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான், இப்போது தலைமை முக்தியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இவர்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! சவூதி அரேபியாவின் புதிய தலைமை முஃப்தியாக ஷேக் சலே பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சவுதி நாட்டின் தலைசிறந்த மத அறிஞராக அறியப்படுகிறார். 90 வயதான ஷேக் சலேவை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பரிந்துரையின் பேரில் மன்னர் சல்மான் நியமித்ததாக சவூதி பிரஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஷேக் சலே சவூதி அரேபியாவின் அல்-காசிம் மாகாணத்தில் பிறந்த ஷேக் சலே, தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒரு உள்ளூர் இமாமிடம் குரானைக் கற்றார். ‘நூர் அலா அல்-தர்ப்’ (வழி காட்டு) என்ற வானொலி நிகழ்ச்சியில் ஷேக் சலே கலந்து கொண்டார். அதேபோல அவர் பல்வேறு புத்தகங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதன் மூலமாகவே அவர் அங்குப் பிரபலமானார்.

சவுதி அரேபியா அதிரடி முடிவு: சாத்தானின் சகோதரர்கள்! அதேநேரம் கடந்த காலங்களில் ஷேக் சலே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவருடைய கருத்துகள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. கடந்த 2017ல் சன்னி முஸ்லிம்கள் ஷியா முஸ்லிம்களைச் சகோதரர்களாகப் பார்க்க வேண்டுமா என்று ஷேக் சலேயிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு ஷியா முஸ்லிம்கள் சாத்தானின் சகோதரர்கள் என்று கூறி ஷேக் சலே அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதேநேரம் சவுதி உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் இதுபோன்ற கருத்துகளைச் சொல்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். ஈரான் உடனான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி மதத் தலைவர்கள் ஷியாக்களைப் பற்றி இதுபோன்ற சர்ச்சை கருத்துகளைச் சொல்வது நிலைமையை மோசமாக்குவதாகவே இருக்கிறது..
அதில் ஷேக் சலே விதிவிலக்கு இல்லை. ஹவுதி எதிர்ப்பு மேலும், ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகளையும் வெளிப்படையாகக் கண்டித்தவர் ஷேக் சலே.. புனிதத் தலங்களை நோக்கி ஹவுதி படைகள் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதை ஏற்கவே முடியாது என்று சொன்னவர் ஷேக் சலே!
அதேபோல பிரபல வீடியோ கேமான “Pokemon Go”ஐ தடை செய்ய வேண்டும் எனச் சொல்லிக் கடந்த 2016ல் அவர் ஃபத்வா ஒன்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அதே Pokemon Go கேமை உருவாக்கிய நியாண்டிக்கின் கேமிங் நிறுவனத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு கணிசமான முதலீடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை கருத்து அதேபோல அடிமைத்தனம் தொடர்பாகவும் ஷேக் சலே சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாகக் கடந்த 2003ல் ஷேக் சலே, “அடிமைத்தனம் இஸ்லாத்தின் ஒரு பகுதி.. ஜிகாதின் ஒரு பகுதி அடிமைத்தனம்.. இஸ்லாம் இருக்கும் வரை ஜிகாதும் இருக்கும்” கூறியதும் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியது.
அதேநேரம் ஒருவரின் மனதுக்குள் எழும் ஆன்மீகப் போராட்டத்தையே ஜிகாத் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு சவுதியின் கிராண்ட் முஃப்தியாக இருந்த ஷேக் அப்துல்அஜிஸ் பின் அப்துல்லா அல்-ஷேக் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த நிலையில், அதைத் தொடர்ந்து இப்போது ஷேக் சலே கிராண்ட் முஃப்தியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த ஷேக் அப்துல்அஜிஸ் சுமார் 25 ஆண்டுகளாக தலைமை முஃப்தியாக பதவி வகித்தார். கண்ணீர் வீடியோ ஏன் முக்கியம் தலைமை முஃப்தி பதவி என்பது சன்னி முஸ்லிம்கள் உலகில் உள்ள மிக முக்கியமான இஸ்லாமிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.
மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு முக்கிய புனிதத் தளங்களுக்கு சவூதி அரேபியா தாயகமாக இருப்பதால், அந்நாட்டின் தலைமை முஃப்தியின் அறிவிப்புகள் உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.




