50 ஆண்டு”விஸ்கி” போர்.. !

பொதுவாகவே போர் என்றாலே அனைவரும் வெறுப்பார்கள். போர் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அந்தளவுக்கு மோசமாக இருக்கும். போர் சில நாட்கள் வெடித்தாலும் கூட அதன் பாதிப்புகள் சீராகப் பல காலம் ஆகும்.

ஆனால், சுமார் 50 ஆண்டுகளாக ஒரு போர் நடந்த போதிலும், யாருக்கும் எந்தவொரு இழப்பும் ஏற்படவில்லை என்றால் நம்ப முடிகிறதா! அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

போர் என்றாலே பலருக்கும் உலகப் போர் தான் நினைவுக்கு வரும். போர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் இழப்புகளும் கொஞ்ச நஞ்சம் இல்லை.

போர் சீக்கிரம் முடிந்தாலும் கூட அதில் இருந்து மீண்டு வர ஒரு நாட்டிற்கும் மக்களுக்கும் பல காலம் ஆகும். மேலும், போர் ஏற்படுத்தும் பாதிப்புகளும் மிக மோசமாக இருக்கும்.

offbeat world

விஸ்கி போர்

ஆனால், இங்குக் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஒரு போர் நீடித்தது உங்களுக்குத் தெரியுமா.. அதிலும் இந்த போரில் யாருக்கும் எந்தவொரு இழப்போ பாதிப்போ ஏற்படவில்லை..

அட அப்படி என்ன போர் என நீங்கள் கேட்கலாம்.. அதுதான் விஸ்கி போர். டென்மார்க் மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே நடந்த இந்த விஸ்கி போர் 1973ல் தொடங்கி 2022 வரை நீடித்தது.

இந்த 50 ஆண்டுகள் இரு நாடுகளும் ஹான்ஸ் தீவுக்காகச் சண்டையிட்டன. இந்த ஹான்ஸ் தீவு கனடாவின் எல்லெஸ்மியர் தீவுக்கும், டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்திற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய நிலப்பரப்பாகும்.

வெறும் 1.2 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தத் தீவு தான் இரு நாடுகளும் மோதிக்கொள்ளக் காரணமாக அமைந்தது.

ஆரம்பித்தது எப்படி

1970களில், ஆர்க்டிக் பிராந்தியத்தில், குறிப்பாக அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் ஒரு குறுகிய கடல் மார்க்கத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் அதிகரித்தன.

அந்த காலகட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, ஆர்க்டிக் பனி உருகத் தொடங்கியது. இதனால் டென்மார்க் மற்றும் கனடா உட்பட ஆர்க்டிக் எல்லையோர நாடுகள் அந்த கடல் பகுதிகளை உரிமை கோர ஆரம்பித்தன.

இந்த ஹான்ஸ் தீவு கனடா மற்றும் கிரீன்லாந்து இரண்டிலிருந்தும் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் சர்வதேச சட்டத்தின்படி எந்த நாடும் சட்டப்பூர்வமாக உரிமை கோர முடியும்.

கனடா முதலில் உரிமை கோரிய போதிலும், டென்மார்க் அதை எதிர்த்தது. இதையடுத்து 1973ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரச்சனை ஆரம்பிக்கும் முன்பு தீர்வு வந்துவிட்டதே என நினைக்கலாம்.

ஆனால், அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் தீர்வை நோக்கி இல்லை. மாறாகப் பிரச்சனை பிறகு பேசிக் கொள்ளலாம் என்பது போன்ற ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன.

ஹான்ஸ் தீவு

இதனால் ஹான்ஸ் தீவு யாருக்குச் சொந்தம் என்பதற்கு விடை கிடைக்காமல் இருந்தது. இந்தச் சூழலில், 1984 ஆம் ஆண்டில், கனடா இந்தத் தீவில் ஒரு கொடியை ஏற்றி, ஒரு பாட்டில் கனடா நாட்டின் விஸ்கியை விட்டுச் சென்றது. அந்த தீவு கனடா நாட்டுக்குச் சொந்தமானது என்பதை உரிமை கோரும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக, டென்மார்க்கின் கிரீன்லாந்து விவகார அமைச்சரே நேரடியாக அந்தத் தீவுக்குச் சென்று, கனடா நாட்டின் கொடியை அகற்றினார். மேலும், டென்மார்க் கொடியை ஏற்றிவிட்டு, “டேனிஷ் தீவுக்கு வருக” என்று போர்ட்டை வைத்தார்.

இத்தோடு கனடா விஸ்கிக்கு பதிலாக ஒரு பாட்டில் டேனிஷ் ஷ்னாப்ஸை விட்டுச் சென்றார். இப்படி தான் விஸ்கி போர் தொடங்கியது.

20 ஆண்டுகள் மாறி மாறி பதிலடி

அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகள் இதுவே தொடர்ந்தது. கனடா வீரர்கள் அந்த தீவுக்குச் சென்று, டென்மார்க் கொடியை அகற்றிவிட்டு தங்கள் கொடியை ஏற்றி, விஸ்கி பாட்டிலை வைப்பார்கள்.

பதிலாகு டென்மார்க் வீரர்கள் அங்குச் சென்று, கனடா கொடியை அகற்றிவிட்டு தங்கள் கொடியை ஏற்றி, ஷ்னாப்ஸ் பாட்டிலை வைப்பார்கள். சுமார் 20 ஆண்டுகள் இது தொடர்ந்தது.

2005ஸ் தான் இரு நாடுகளும் இதற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் என்பதை அங்கீகரித்தன. ஹான்ஸ் தீவில் குறிப்பிடத்தக்கக் கனிம வளங்கள் எதுவும் இல்லை என்றாலும், அதன் இருப்பிடம் இரு தரப்பிற்கும் முக்கியமானதாக இருந்தது. இதனால் அந்த தீவு யாருக்குச் சொந்தம் என்பதை முடிவெடுக்க வேண்டும் என்பதை இரு நாடுகளும் உணர்ந்தன.

முடிவுக்கு வந்த பிரச்சனை

பிறகு வழக்கம் போல மிக நீண்ட பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் 2022 ஜூன் மாதம், டென்மார்க்கும் கனடாவும் ஒட்டாவாவில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதாவது இரு தரப்பும் தீவை இரண்டாகப் பிரித்துக் கொள்ள ஒப்புக்கொண்டன. இதன் மூலம் விஸ்கிப் போர் முடிவுக்கு வந்தது. அதேநேரம் இந்த மரபை நினைவு கூறும் வகையில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி டென்மார்க் அமைச்சருக்கு விஸ்கியை கொடுத்தார்.

பதிலுக்கு டென்மார்க் வெளியுறவு அமைச்சர் ஜெப்பே கோஃபோட் கனடா நாட்டின் அமைச்சருக்கு ஷ்னாப்ஸை கொடுத்தார்.

Previous Story

ඇමති විජේපාල ප්‍රබලයින් දෙදෙනෙකු සමඟ වැඩකට ගිහිං | ඝාතන සැලසුමක් හෙළිවෙයි | දේශපාලන සම්බන්ධතා රැසක්

Next Story

தண்டனையில் இருந்து தப்பிய 'நல்ல நாஜி'