மலையகத்தாருக்கு வீடுகள்
இந்திய ஊடகத்தின் பார்வை
இலங்கை மலையக மக்களுக்கு இந்தியா உதவியுடன் வீடு கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 1,300 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மேலும் 2,056 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, அந்த மக்களுக்கு இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க பட்டா வழங்கியுள்ளார்.
இலங்கையில் கடந்த சில வருடங்களாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போதுதான் அதில் இருந்து படிப்படியாக மீள தொடங்கியுள்ளனர். அங்கு தேசிய மக்கள் கட்சியின் அனுரகுமார திசாநாயக்க அதிபராக உள்ளார். இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இந்தியா பல்வேறு வகையில் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
மலையக மக்களுக்கு வாக்குறுதி இலங்கையை பொறுத்தவரை மலையக மக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்டதால், அவர்களை இந்திய வம்சா வழித் தமிழர்கள் என்றும் அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அந்த மக்கள், ஆதரவுக்கரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக மலையக மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் மலையக மக்களுக்காக வாக்குறுதிகளை வழங்குவார்கள். கடந்த 2024 அதிபரான அனுரகுமாரவும், மலையக மக்களின் பழைய வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
பள்ளி, கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்களை நியமித்தல், சுகாதார வசதிகளை செய்து கொடுத்தல், ஊதிய குறைவு பிரச்சனைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். வீடுகட்ட பட்டா அங்கு சுமார் 10,000க்கும் வீடுகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ், 1,300 வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள வீடுகளை விரைந்து கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளும் விரைவில் முடியும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 2,056 வீட்டு உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (12 ஆம் தேதி) இலங்கையில் நடைபெற்றது.
அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு பட்டா வழங்கினார். மலையக மக்கள் கண்ணீர் மல்க பட்டா பெற்று கொண்டனர். பத்திரம் பெற்றவர்களுக்கு வீடு கட்டும் பணி இந்த வருட இறுதிக்குள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 4,700 வீடுகள் பணிகளை வேகமாக முடித்து அந்த வீடுகளையும் மக்களுக்கு விரைந்து ஒப்படைப்போம் என்று அனுரகுமார தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 2,700 வீட்டு பட்டா விரைவில் வழங்கப்படும் என்றும், 2026 இறுதிக்குள் 4,700 வீடுகளை கட்டி மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.