அமெரிக்காவில் ஐ.நா. பொதுச்சபையின் 80-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் பேசுவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் சென்றுள்ளார். இரண்டாவது முறையாக அதிபரான பின்னர் டிரம்ப், ஐநாவில் பேச சென்றது இதுவே முதல்முறை..
மனைவியோடு ஆசையோடு சென்றவருக்கு, எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டு வேலை செய்யவில்லை.. இதுதான் இப்படி என்றால், டெலிபிராம்டரும் வேலை செய்யவில்லையாம்.. இதனால் கடும் கோபம் அடைந்தார்..
பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். அமெரிக்காவின் வர்த்க தலைநகரான நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 80-வது கூட்டத்தொடர் செப்டம்பர் 9ம் தொடங்கி, செப்டம்பர் 23 வரை நடந்தது. அதில் பேசுவதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் சென்றார்.
2-வது முறையாக அதிபரான பின்னர் அவர் ஐ.நா.வில் பேசுவதற்காக சென்றது இதுவே முதல் முறையாகும். இந்த கூட்டத்திற்கு மனைவியுடன் ஆசை ஆசையாக சென்றவருக்கு ஐநா சபை கட்டிடத்தில் நடந்த சம்பவம் டிரம்பை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
கால் வைத்ததுமே வேலை செய்யவில்லை கூட்டம் நடக்கும் மேல்தளத்துக்கு செல்ல எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டில் டிரம்பும், மெலனியாவும் கால் வைத்து ஏறியுள்ளனர். சற்று நேரத்தில், நகரும் படிக்கட்டு பாதியில் நின்று விட்டது. இதனால் என்ன இப்படி நடக்கிறது என்று டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார்.
படிக்கட்டு மீண்டும் இயங்கும் என்று சில விநாடிகள் காத்திருந்துள்ளார். ஆனால் இயங்கவே இல்லை.. இது என்னடா சத்திய சோதனை என்று நொந்துபோன டிரம்ப், தள்ளாத வயதிலும், மனைவி மெலனியா உடன் நகரும் படிக்கட்டிலேயே மேலே ஏறி நடந்தே சென்றார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியது. டெலிபிராம்ப்டர் வேலை செய்யவில்லை நகரும் படிக்கட்டின் உச்சியை அடைந்தவுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமினா முகமது வரவேற்றார். அவரிடம், ”எஸ்கலேட்டர் உடைந்து விட்டது” என்று டிரம்ப் கூறியிருக்கிறது.
அதற்கு அமினா முகமது தனது வருத்தத்தை தெரிவித்தார். டிரம்புக்கு ஏற்பட்ட கஷ்டம் அத்துடன் முடியவில்லை. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அவர் உரையாற்ற நின்றபோது, உரையை பார்த்து படிக்க வசதியான கருவியான ‘டெலிபிராம்ப்டர்’ செயல்படவே இல்லை.. இதனால் டிரம்ப் மேலும் கோபம் அடைந்தார். ஆனால் கோபத்தை வெளிக்காட்டாமல், நகைச்சுவையாக பேசி சமாளித்தார்.

டெலிபிராம்ப்டரை யார் இயக்குகிறாரோ, அவர் பெரிய சிக்கலில் மாட்டுவார் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும் என்று சிரித்து கொண்டே கூறினார். மேலும் ஐ.நா.விடம் இருந்து நான் பெற்றதெல்லாம், பாதியில் நின்றுபோன எஸ்கலேட்டர். என் மனைவி நல்ல உடல்வாகுடன் இல்லாவிட்டால், கீழே விழுந்திருப்பார்.
நாங்கள் இருவருமே நல்ல உடல்வாகுடன் இருப்பதால், அப்படியே நின்று கொண்டிருந்தோம். இங்கே டெலிபிராம்ப்டர் இயங்கவில்லை. மோசமான எஸ்கலேட்டர், மோசமான டெலிபிராம்ப்டர், இவைதான் ஐ.நா.விடம் நான் பெற்றவை. மிக்க நன்றி என்று நக்கலாக கூறியிருந்தார் டிரம்ப். அமெரிக்கா கோபம் அதைத்தொடாந்து, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குடரசை டிரம்ப் சந்தித்து, நகரும் படிக்கட்டு, டெலிபிராம்ப்டர் இயங்காததை சுட்டிக்காட்டினார்.
தற்போது இப்பிரச்சனையை வெள்ளை மாளிகை பெரிதாக எடுத்துக் கொண்டு கேள்வி எழுப்பி வருகிறது. அதன் செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், அதிபர் டிரம்பும், அவருடைய மனைவியும் நகரும் படிக்கட்டில் ஏறியவுடன் ஐ.நா.வில் உள்ள யாரேனும் வேண்டுமென்றே படிக்கட்டை நிறுத்தி இருந்தால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.
மொத்த ஆப்பிரிக்காவையும் திரும்பி பார்க்க வைத்த ஜாம்பியா மக்கள் டிரம்ப் வரும் நிறுத்தி உள்ளார்கள் உடனே விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் ஐ.நா. ஊழியர்கள் சிலர் நகைச்சுவையாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்களாம்.
அதாவது, டிரம்ப் வரும்போது நகரும் படிக்கட்டை நிறுத்திவிட்டு, பணம் இல்லாததால் இயங்கவில்லை’ என்று அவரிடம் நாங்கள் கூறி விடுவோம்” என்று ஐநா ஊழியர்கள் கூறினார்களாம்.. இப்படியாக கரோலின் கோபத்துடன் கூறியிருந்தார்.
ஐநா விளக்கம் அதே சமயத்தில், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி டுஜார்ரிக் கூறுகையில், அமெரிக்க அதிபர், அவருடைய மனைவி, பிரதிநிதிகள் ஆகியோர் பிரதிநிதிகளுக்கான நுழைவாயில் வழியாக நுழைந்து, பாதுகாப்பு கதவுகளை கடந்து நகரும் படிக்கட்டை அடைந்தார்கள்.
அப்போது அவர்களின் வருகையை வீடியோ எடுப்பதற்காக அமெரிக்க குழுவை சேர்ந்த வீடியோ கேமராமேன் முன்கூட்டியே நகரும் படிக்கட்டில் ஏறி இருந்தார். அவர் படிக்கட்டில் பின்புறமாக சென்றபடியே டிரம்பின் வருகையை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
அவர் படிக்கட்டின் உச்சியை அடையும்போதுதான், டிரம்பும், அவருடைய மனைவியும் கீழ் படிக்கட்டில் கால் வைத்தனர். அப்போது படிக்கட்டு நின்று விட்டது. டிரம்ப் குழு 2-வது மாடிக்கு செல்வதற்குள் எங்கள் தொழில்நுட்ப நிபுணர் கோளாறை சரி செய்து விட்டார்.
அமெரிக்க கேமராமேன் தவறு நாங்கள் நடத்திய விசாரணையில், நகரும் படிக்கட்டின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பொத்தானை வீடியோ கேமராமேன் தவறுதலாக அழுத்தி விட்டதுதான் காரணம் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.
நாங்கள் அங்கு ஆட்களோ, பொருட்களோ தவறுதலாக சிக்கிக்கொண்டு உள்ளே இழுக்கப்படுவதை தடுக்க அந்த பாதுகாப்பு பொத்தானை வைத்திருக்கிறோம். அதை அமெரிக்க கேமராமேன் அழுத்தியதால் தான் இந்த தவறு நடந்தது” என்று கூறினார்.





