அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது உலக அளவில் மிக்ப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ட்ரம்பின் வரிவிதிப்பை அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா ஒன்றும் பள்ளிக் குழந்தை அல்ல, அது ஒரு பெரிய நாடு. ட்ரம்ப் எடுத்த முடிவு அறிவில்லாதது என அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விமர்சனம் செய்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பின்னரும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. இதனால், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகள், எஃகு மற்றும் உணவுப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது.
ஆனால், அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடான சீனாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி கொண்டிருந்தது. சீனாவை எதிர்த்து எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்காத அமெரிக்கா, இந்தியாவை மட்டும் குறிவைத்தது பாகுபாடான அணுகுமுறை என விமர்சிக்கப்பட்டது.

டொனால்டு ட்ரம்ப்
அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி சட்டவிரோதமானது எனவும் அதனை நீக்க வேண்டும் என அமெரிக்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ட்ரம்பின் 50 சதவீத நடவடிக்கை விவேகமற்ற கொள்கை என விமர்சித்துள்ளார் அமெரிக்க பத்திரிக்கையாளரான ரிக் சான்சஸ்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,” அமெரிக்கா, இந்தியாவை பள்ளிக் குழந்தையை நடத்துவது போல அணுகுகிறது. ஆனால் இந்தியா வளர்ந்து வரும் சக்திவாய்ந்த நாடு. வரலாறு, வளங்கள் மற்றும் திறன்களில் சிறந்தது.
ரஷ்யா உக்ரைன் போர்
அமெரிக்க தலைவர்களில் பலருக்கும் சர்வதேச பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்வதற்கான ஆர்வமோ திறமையோ இல்லை. ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து ட்ரம்பின் ஆலோசகர் பீட்டர் நவேரோ, இது பிரதமர் மோடியால் நடைபெறும் போர் என்று கூறினார்.
இது முற்றிலும் அபத்தமானதும் நகைப்புக்குரியதுமான கருத்து. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு பேசுவது அமெரிக்காவின் தரக்குறைவான அணுகுமுறையை காட்டுகிறது” என கூறியுள்ளார்.
சட்டவிரோத வரி
அமெரிக்காவின் பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவாகவே இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தாலும் அமெரிக்காவிலேயே பலர் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்க நீதிமன்றமே டிரம்பின் செயல் சட்ட விரோதம் என தீர்ப்பு வழங்கியிருப்பது அவரது முடிவுகள் சட்டரீதியாகவும் தவறானது என்பதை எடுத்துக்காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.