-நஜீப் பின் கபூர்-
ஆறு நிமிடங்கள் வரை பதிவாகி இருக்கின்ற இந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு நீங்கள் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆர்ட்எடெக் வந்து விட்டது.
இப்போது மனிதனை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அதி தீவிரப் பிரிவில் சேர்திருக்கின்றார்கள்.
அவர் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் இருக்கின்றார் என்றுதான் நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும். உங்கள் கணிப்பில் தவறுகள் கிடையாது.
அடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த நிகழ்வை மிகுந்த வேதனையில் பார்த்து சபிப்பது போலவும் இதில் காட்சி வருகின்றன.
பாதுகாப்புப் படையினர் எவ்வளவு அக்கறையுடன் ரணில் விடயத்தில் கடியானைப்போல் ஓடி ஓடி கடமைகளைச் செய்து முன்னேற்பாடுகளை கவனிப்பதும் இதில் பதிவாகி இருக்கின்றது.
முழு வைத்தியசாலை நிருவாகமுமே அம்பியூலன்ஸ் வண்டியில் ரணில் வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வரை காத்துக் கொண்டிருக்கின்ற காட்சிகளும் இதில் பதிவாகி இருக்கின்றன.
ஆம் பொலிஸ் பாதுகாவலுடன் ரணில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு விட்டார். வைத்தியர்கள் தாதிமார் சிற்றூழியர்கள் ரணிலை எடுத்துக் கொண்டு அதிதீவிர பிரிவுக்கு ஓடும் காட்சிகள் அங்கே தெரிகின்றன.
இது வரை உங்களுக்கு நாம் போடுகின்ற பதிவில் எந்தக் குழப்பமும் வந்திருக்காது. காட்சிகளைப் பார்க்கின்ற நமக்குக் கூட ரணிலைப் பிடிக்கா விட்டாலும் மனதில் ஒரு சின்ன நெகிழ்ச்சி பிறப்பது இயல்புதான். ஏன் நாமும் மனிதப் பிறப்பு என்பதால்தான் அப்படி. ஓகேயா!
இப்போது கருவுக்குள் நுழைவோம். இது அரசுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழ மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி-தயாரிப்பு இது என்றால் நீங்கள் நம்புவீர்களா!
ரணில் கைது. அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டது. பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது எல்லாம் சரி. அது கொழும்பு நிகழ்வுகள்.!
இப்படியான ஒரு பரபரப்பான காட்சியைத் தயாரித்து சமூக ஊடகக்காரர்கள் பிழைப்புக்கு தொழில் செய்வதுதான் பெரும் அக்கிரமம். கேவலம் அசிங்கம்.
எமது செய்திகளை வழக்கமாகப் பார்க்கின்ற பல்லாயிரக் கணக்கான வரவுகளே, இந்த அனைத்துக் காட்சிகளுக்கும் ரணில் செய்திகளுக்கும் எந்த தொடர்புகளும் கிடையாது.
இன்று குறிப்பிட்ட சமூக ஊடகத்தில்-ஊடகங்களில் வெளியான அனைத்தும் கண்டி வைத்தியசாலையில் எப்போதோ எடுக்கப்பட்ட காட்சிகள். இதற்கும் ரணிலுக்கும் எந்த முடிச்சுக்களும் கிடையாது.
இந்தக் காட்சிகளை நீங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்ற போது அவை அனைத்தும் கண்டி வைத்தியசாலைக்குரியவை என்பதனை நாம் சொல்லாமலே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
இதனை நாம் எப்படித்துல்லியமாக கண்டு கொண்டோம் என்றால். நாம் அறிந்த வைத்தியர்கள் மேட்டன்மார் தாதிகள் ஏனைய வைத்திய ஊழியர்கள் உறவுகள் அந்தக் காட்சிகளில் வருவதைப் பார்த்த போதுதான் இது விடயத்தில் எமக்கு சந்தேகம் வந்தது.
வைத்தியசாலையில் கடமைபுரியும் நாம் அறிந்த பல அதிகாரிகளிடம் இது பற்றி தொடர்பு கொண்டபோது இது குடிமக்கள் தலையில் கொம்பு வைக்கின்ற ஒரு ஏற்பாடு என்று தெரிந்தது.
உடனே நாம் அறிந்த என்பிபி. அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு இது பற்றி அறியக் கொடுத்தோம். அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.
இந்த நாட்டில் நீதி நியாயம் வரும். நமது சந்ததியினருக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும் என்று மக்கள் நம்பி இருக்கும் இந்த நேரத்தில் ரணிலுக்குத் தண்டனை வழங்கியது நாகரீகம் இல்லாத ஒரு செயல் என சுமந்திரன்-ஹக்கீம் கூட்டாக செய்தி சொல்லி இருக்கின்றார்கள்.
அப்போ, பொதுமக்கள் சொத்துக்களை சூரையாடுவதுதான் இவர்கள் சொல்லும் நாகரிகமாக இருக்க வேண்டும்! இதே ஆட்கள்தான் எங்கே கள்வர்களைப் பிடித்து விட்டீர்களா என்றும் நாடாளுமன்றில் கேட்கின்றனர்.
நாட்டில் நடந்த கொள்ளைகள் களவுகள் மோசடிகள் நிந்தனைகளுக்கு தண்டனை வழங்குவதை இவர்கள் விரும்பவில்லை.
பிரபுக்களுக்கு வேறு சட்டம் மக்களுக்கு வேறு சட்டம் என்றுதான் இருக்க வேண்டும் என்பதில் நமது தலைவர்கள் உறுதியாக இருப்பது இதிலிருந்து தெளிவாகின்றது. ஐயா இது சமயமா தர்மமா?
நமது தலைவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு வேளையில் ரணிலால் பிழைத்து வளர்ந்தவர்கள் அவரது கொள்ளைகள் சட்டவிரோத செயல்களை கண்டு கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி அணுராவைக் கேட்கின்றார்கள் போலும்.