ரூ.7 கோடி பணம்!
கல்யாணம் முடிந்த கையோடு ஓட்டம்!
இந்தோனேசியாவில் ரொம்பவே வினோதமான ஒரு திருமணம் நடந்துள்ளது. அங்கு 74 வயதான முதியவர் ஒருவர், அவரை விட 24 வயது இளம் பெண்ணை பணம் கொடுத்து வாங்குவது போல வாங்கி திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும், கல்யாணம் முடிந்த கையோடு அவர் அந்த நபரை விட்டுச் சென்றுவிட்டாராம்.
இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். பொதுவாக மணமக்கள் இடையே ஓரிரு ஆண்டுகள் வயது வேறுபாடு இருக்கவே செய்யும். ஆனால், இந்தோனேசியாவில் ரொம்பவே வினோதமான ஒரு திருமணம் நடந்துள்ளது. அங்கு 74 வயது முதியவர் ஒருவர், தன்னை விட 50 வயது குறைவாக உள்ள பெண் ஒருவரைக் கல்யாணம் செய்துள்ளார்.
இதற்காக அந்த முதியவர் பெண் வீட்டாருக்கு சுமார் ரூ.7 கோடி வரதட்சணை கொடுத்துள்ளார். அவர்களின் கல்யாணம் எல்லாம் நன்றாகத் தான் நடந்துள்ளது. என்ன நடந்தது இருப்பினும், திருமணத்திற்குப் பின்னர், அந்த நபர் போட்டோகிராபருக்கு பணம் செலுத்தாமல் மாயமாகிவிட்டராம். இது தொடர்பாக போட்டோகிராபர் புகாரளித்த பிறகே இது வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.
இந்த சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் கிழக்கு ஜாவாவின் பசிடன் ரீஜென்சியில் அக்டோபர் 1ம் தேதி இந்த ஆடம்பரமான திருமணம் நடைபெற்றது. 74 வயதான அந்த முதியவர் தர்மன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் 24 வயதான ஷெலா அரிக்கா என்ற தனது பெண்ணை திருமணம் செய்யவே சுமார் ரூ.7கோடி வரதட்சணை கொடுத்துள்ளார். வரதட்சணையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதாம். அதேபோல திருணத்திற்கு வந்தவர்களும் கூட ரொக்கத்தைப் பரிசாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் அந்த தாத்தா!
இருப்பினும், திருணத்திற்குப் பிறகு போட்டோகிராபி செய்த நிறுவனத்திற்கு அவர் பணம் கொடுக்கவில்லையாம். இது தொடர்பாகக் கேட்டபோதும் முறையான ரெஸ்பான்ஸ் இல்லை. அதன் பிறகே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைவிட்ட முதியவர்? இதற்கு நடுவே மாப்பிள்ளை தர்மன், திருமணம் முடிந்த கையோடு மனைவியைக் கைவிட்டதாகவும் மண்டபத்தில் இருந்து தப்பி சென்றதாகவும் கூட தகவல்கள் பரவின.
இதனால் இணையத்தில் இது பேசுபொருளானது. மனைவியை விலை கொடுத்து வாங்கிய நபர், கல்யாணம் முடிந்தவுடன் கைவிட்டு சென்றுவிட்டதாக நெட்டிசன்கள் கடுமையாகச் சாடினர். இதற்கிடையே தர்மன் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தான் மனைவியைக் கைவிட்டுவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், “நான் என் மனைவியை பிரியவில்லை.. நாங்கள் இன்னும் ஒன்றாக இருக்கிறோம்” என்று கூறினார்.
மணப்பெண்ணின் குடும்பத்தினரும் இருவரும் பிரியவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். இருவரும் தேனிலவுக்குச் சென்றுள்ளதாகப் பெண் வீட்டார் தெரிவித்தனர்.. அடுத்து என்ன விசாரணை அதேநேரம் கட்டணம் செலுத்தப்படாதது தொடர்பாக போட்டோகிராபி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தோனேசியாவில் திருமணங்களில் வயது வித்தியாசம் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வரும் சூழில், இந்த திருமணம் பேசுபொருளாகியுள்ளது.