22வது திருத்தத்துக்கு ஆப்பு!

நஜீப்

கடந்த வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் 22வது அரசியல் அமைப்பின் திருத்தங்கள் பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை திடீரென இரத்துச் செய்து வருகின்ற 18ம் திகதி துவங்குகின்ற அமர்வில்தான் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அன்றும் இது விவாதத்துக்கு வருமா என்ற விடயத்தில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. இந்த 22வது திருத்தத்தில் 13வது திருத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று ஆளும் மொட்டுக் கட்சியினர் இதனை எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

ஆனால் மொட்டுக் கட்சி முக்கியஸ்தார் மஹிந்தவே தமிழர்களுக்குப் பதிமூன்று பிளஷ் கொடுப்பேன் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி இருந்ததும் தெரிந்ததே. இப்போது அவரே ஆள் வைத்து இந்த 22வது திருத்தத்தை எதிர்ப்பதாகவும் தெரிகின்றது.

ராஜபக்ஸாக்களின் இவ்வாறான அரசியல் ஏமாற்று வேலைகளை இந்தியா இன்னும் எவ்வளவு காலத்துக்கு பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றது? அல்லது இந்தியாவின் ஏற்பாட்டில்தான் அவர்கள் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்றும் சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது.

நன்றி:09.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கண்டவுடன் காதல்: முகலாய மன்னர் ஒளரங்கசீப் - ஹீராபாய் காதல் வரலாறு 

Next Story

இன்றும் கோட்டாவே ஜனாதிபதி...! மஹிந்த அதிரடி!