ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி 12 நாட்கள் போர் புரிந்தது. இதில் அமெரிக்காவுடன் திடீரென்று நுழைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது போர் முடிவடைந்த நிலையில் ஈரான் தனது விமானப்படையை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த விஷயத்தில் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவை கைகழுவிவிட்டு இஸ்ரேல், அமெரிக்காவை சமாளிக்க சீனாவிடம் இருந்து ஜே-10சி போர் விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது.

இந்த போர் விமானங்களின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே நடந்த போர் கடந்த மாதம்24ம் தேதி முடிவுக்கு வந்தது. ஈரான் மீது இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஈரானும் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஈரான் ஏவி தாக்கியது. அதேபோல் கத்தாரில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் முற்றியது. இஸ்ரேலை விட ஈரானுக்கு தான் அதிக இழப்பு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தான் காரணமாகும். அதன்பிறகு கடந்த மாதம் 24ம் தேதி இஸ்ரேல் – ஈரான் ஆகியவை போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன.
அமெரிக்கா சார்பில் இருநாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 12 நாளுக்கு பிறகு போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்து அமைதி திரும்பி உள்ளது. இருப்பினும் இஸ்ரேல் – அமெரிக்கா அவ்வப்போது ஈரானை மிரட்டி வருகிறது.
ஈரான் மீண்டும் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கையில் எடுத்தால் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து நடத்திய தாக்குதலில் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன.
அணுஆயுதத்தை தயாரிக்க தேவையான யுரேனியம் இங்கு செறிவூட்டப்பட்டு வந்தது. தற்போது இந்த 3 அணுசக்தி நிலையங்களையும் அமெரிக்கா அழித்துள்ளது. அதேபோல் ஈரானின் ராணுவ தளங்களையும் இஸ்ரேல் அழித்துள்ளது.
இந்த 3 அணுசக்தி நிலையங்கள் மட்டுமின்றி 1,000க்கும் அதிகமானவர்கள் ஈரானில் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலின் மூலமாக வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் மற்றும் விமானப்படையை இன்னும் பலப்படுத்த வேண்டியதை ஈரான் உணர்ந்துள்ளது
இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து தாக்கியபோது ஈரானின் விமானப்படையால் தங்களின் போர் விமானங்களை வைத்து பதில் தாக்குதல் கூட நடத்த முடியவில்லை. ஈரான் தற்போது அதன் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவின் பழைய மாடல் ஜெட் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன.
இதனை அப்கிரேட் செய்யவில்லை. புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்க ஈரான் மாற்றியமைக்கவில்லை. இதனால் ஈரானின் விமானப்படையால் போர் விமானங்களை பயன்படுத்த முடியவில்லை. ஈரானை எடுத்து கொண்டால் ரஷ்யாவின் Sukhoi Su – 24 மற்றும் MiG – 29 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
இதில் Sukhoi Su -24 3ம் தலைமுறை விமானமாகும். MiG -29 என்பது 2ம் தலைமுறை விமானமாகும். தற்போது 5ம் தலைமுறை விமானங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
நம் நாடு 4ம் தலைமுறை விமானமான ரஃபேலை பயன்படுத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலின்போது ஈரானால் ரஷ்யாவின் விமானங்களை பயன்படுத்த முடியவில்லை.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து 5ம் தலைமுறையை சேர்ந்த Sukhoi Su -35 ரக போர் விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்தது. இதுதொடர்பாக இருநாடுகள் இடையேயான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் முதற்கட்டமாக ஈரான், சீனாவுடன் சேர்ந்து தனது விமானப்படையை பலப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி ரஷ்யாவுக்கு பதில் சீனாவின் பக்கம் ஈரான் செல்கிறது. அதாவது உக்ரைனுடன் தற்போது ரஷ்யா போர் புரிந்து வருகிறது.

இதனால் ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் கூட அது கிடைக்க அதிக காலம் எடுக்கும். இதனால் சீனாவிடம் இருந்து ஈரான் போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது.
ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே சமீபத்தில் சீனாவுக்கு சென்றார். சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் சீனாவின் ஜே 10சி ரக போர் விமானத்தை வாங்குவது தொடர்பாக சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விமானம் கிடைக்கும் பட்சத்தில் தற்போது இருப்பதை விட ஈரானின் விமானப்படை கொஞ்சம் பலமாகும். ஏனென்றால் சீனாவின் ஜே 10 சி போர் விமானம் என்பது 4.5ம் தலைமுறையை சேர்ந்தது. மல்டி ரோல் போர் விமானமாகும். இது அதிநவீன AESA ரேடார், டிஜிட்டல் காக்பிட் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
இந்த விமானத்தை பயன்படுத்தி இருந்து வானில் இருந்து தரையில் உள்ள இலக்கையும், கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த முடியும். மேலும் PL-15 எனும் ஏவுகணைகளை சுமந்து இந்த விமானத்தால் தாக்குதல் நடத்த முடியும். இந்த விமானம் மாக் 2 வேகத்தில் செல்லும்.
வானிலேயே எரிபொருள் நிரப்ப முடியும். இந்த விமானங்கள ரஃபேல் மற்றும் அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானங்களுடன் நிகரானது என்று சொல்லப்படுகிறது.
இந்த விமானத்தை பாகிஸ்தான் வாங்க தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது ஈரானும் சீனாவிடம் இது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. ஆனால் ஜே -10 சி ரக போர் விமானங்களை சீனாவிடம் இருந்து ஈரான் வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்னும் செய்யப்படவில்லை.
‛குளோபல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில்,, ‛‛எங்களின் நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதைச் செய்வதன் மூலம், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு சீனா ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்யும்” என்று கூறியுள்ளார்.





