வாராந்த அரசியல் 29.06.2025

-நஜீப்-

நன்றி ஞாயிறு தினக்குரல் -29.06.2025

செம்மணியில் பூகம்பம் வெடிப்பு!

UN human rights chief pays tribute at Chemmani protest, visits mass graves | Tamil Guardian

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்  வோல்கர் டர்க் தமிழர் பகுதிக்கு வந்து மக்களுக்கு ஒரு நம்பிக்கையக் கொடுத்து விட்டுப் போய் இருக்கின்றார். அப்போது நெடுநாட்களுக்கு பின்னர்  உணர்வுபூர்வமான ஒரு போராட்டத்தை அல்லது ஒன்று கூடலை அப்போது நமக்குத் தமிழர் பூமியில் பார்க்க முடிந்தது.

அங்கு காணாமலாக்கப்பட்ட தனது உறவுகளுக்கு நீதி கோரியே இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. அப்போது அந்த இடத்துக்கு வந்த அரசியல்வாதிகளுக்கு கூடி இருந்த மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அப்போது அந்த இடம் நெருப்பாக கொதித்தது. இதில் CVK.சிவஞானம் சாணக்கியன் ஆளும் தரப்பு அமைச்சர் சந்திரசேக்கரன் போன்றவர்களை மக்கள் கடும் வார்த்தைகளில் திட்டித் தீர்த்தனர்.

துரோகிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைத்தது தொடர்ப்பில் சிவஞானம் நன்றாக கட்டி வாங்கிக் கொண்டார்.

சட்டவல்லுணர் தலைமறைவு. இது ஒரு கும்பல் பார்த்த வேலை என்பது சணக்கியர் கருத்தாகும். ஜெனீவாவில் போய் அழைவதை விட இது நல்ல அறுவடையைத் தரக் கூடும்.

சஜித்துக்கு கடைசிக் காலம்!

Sri Lanka Opposition Candidate Wants to Renegotiate IMF Loan - Bloomberg

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் நகர்வுகளை அவதானிக்கின்ற போது ஆளும் என்பிபி. அரசியலுக்கு அல்லது இந்த அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பலமான அணி ஒன்று அவசியப்படுகின்றது. இப்படிச் சொல்லி இருக்கின்றார் கடும் பௌத்த வாதத்தை பின்பற்றுகின்ற அரசியல்வாதி சம்பிக்க ரணவக்க.

அவர் மேலும் தெரிவிக்கின்ற போது தற்போது ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும் ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சிக்கும் ஏற்பட்ட ஒரு நிலை விரைவில் SJB க்கும் ஏற்படும் என்று குறிப்பிடுக்கின்றார் சம்பிக்க. அப்போது இந்த நாட்டு அரசியலில் இருந்து சஜித் பிரேமதாச காணாமல் போவார் என்பது அவரது கணக்காக இருக்கின்றது.

இவர் குறிப்பிடுகின்ற படி ஒரு பின்னடைவு சஜித்தின் அரசியல் காணப்படுவது உண்மையாக இருந்தாலும். அந்த இடத்தை அடையும் ஒரு எதிர்பார்ப்பும் இந்த ஆசாமிக்கு இருக்கின்றது என்பதுதான் எமது கருத்தாக இருக்கின்றது. அப்படிப் பார்க்கின்ற போது சஜித் தப்பானவர் அல்ல. ஆனால் மனிதன் பலயீனமானவர்.

ஹக்கீம்-ரிசாட் துரோகங்கள்!

Hakeem and Rishad to be expelled from SJB!

ஆளும் NPP பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டது. இப்போது மொத்தமுள்ள 341 உள்ளாட்சி சபைகளிலும் அது தனது பலத்தைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்தத் தேர்தலில் சஜித்தின் SJB 21 சதவீதமான வாக்குகளைப் பெற்றாலும்  அவர்களுக்கு மொத்த உள்ளாட்சி சபைகளில் வெரும் எட்டு (8) சதவீதமான சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கின்றது.

NPP. தனியாக 151 சபைகளையும் தமக்கு ஆரரவு வழங்கும் தனி நபர்களை வைத்து மேலும் 75 வரையிலான சபைகளை இதுவரை தம்வசப்படுத்தி இருக்கின்றது. நமக்கு கடைசியாகக் கிடைத்த தகவல்களின் படி NPP- 240   SJB- 27 TAK- 17  SLMC, SPP, SWC என்பன தலா- 3. SLPP.-1 ஏனைய 13 என்று இது அமைகின்றது.

இதற்கிடையில் தம்முடன் கூட்டாணியில் இருக்கும் ஹக்கீம்-ரிசாட் என்போர் வழக்கம் போல கூட்டணிக்குத் துரோகம் செய்வதாக சஜித் அணியில் கடும் குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.

கொழும்பில் 36 கோடி கொள்ளை!

Colombo Municipal Council

கொழும்பு நகர சபையில் நிச்சயமாக நாம்தான் இரகசிய வாக்களிப்பு மூலம் மேயரைத் தெரிவு செய்வோம் என்று சொன்ன முஜிபர் பின்னர் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தவில்லை என்று பல்டியத்திருக்கின்றார்.

அதேநேரம் பிந்திய தகவல்களின்படி கொத்மலை பிரதேச சபையில் இதே கட்சியினர் இரகசிய வாக்கொடுப்பு நடத்த வேண்டும் என்று அங்கு கலகம் புரிந்திருக்கின்றார்கள்.

இது என்ன முரண்பாடு.? ஆனால் நாம் இப்போது சொல்ல வருகின்ற கதை சற்று வித்தியாசமானது தொன்று. நகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிடத்துக்கு வரி அறவிடல் விடயத்தில் அங்கு 36 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் இதில் இரண்டு அரசியல்வாதிகள் சம்பந்தமாம்.

ஒருவர் சிறுபான்மை சமூகத்தையும் மற்றவர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களாம் என்றும் தெரிகின்றது. இந்த விடயம் தற்போது நீதி மன்றத்துக்கு வர இருப்பதாக நமக்கு வரும் தகவலகள் தெரிவிக்கின்றன. அப்போது இவர்கள் யார் என்று கண்டு கொள்ள முடியும்.

நாடாளுமன்றம் வரும் டில்வின்!

Provincial Councils 'unsuccessful' says Tilvin Silva, General Secretary of JVP | Tamil Guardian

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை (159) வைத்திருக்கும் என்பிபி.யில்  தற்போது காலியாக இருக்கின்ற ஒரு இடத்துக்கு ஜேவிபி. செயலாளர் டில்வின் வர இருக்கின்றார் என்று சமூக ஊடகங்களிலும் சில அச்சு ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.

ஆனால் ஜேவிபி. கட்சியில்  மிகவும் செல்வாக்கு மிக்க அந்த மனிதன் நாடாளுமன்றத்துக்கு வருகின்றார் என்ற கதையை நாம்  நிராகரிக்கின்றோம். நாட்டில் இருக்கின்ற வேறு கட்சிகளில் இப்படி ஒரு இடைவெளிவருமாக இருந்தால் அதற்கு எப்படி எல்லாம் போட்டிகள் வரும் என்பது நாம் அவ்வப்போது பார்த்து வந்திருக்கின்றோம்.

அப்படி ஒரு போட்டி என்பிபி. யில் இருப்பதால் அதனைச் சமாளிக்க டில்வின் வருகின்றார் என்று எடுத்துக் கொள்ள முடியும்.? ஆனால் அந்தக் கட்சியில் அப்படியான நிலை ஒரு போதும் இல்லை என்பதுதான் எமது கருத்தாக இருக்கின்றது. இதுவும் ஒரு கட்டுக்கதையாக இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

Previous Story

உளவுத்துறை மூலம் ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு.!

Next Story

චන්ද්‍රිකා රටේම හොරු ගැන කියයි