21வது அரசியலமைப்பு திருத்தம்: பொதுஜன முன்னணியின் அதிருப்தி!

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கவலை வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை அதன் முந்தைய வடிவில் மீண்டும் கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவாக இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்குவதற்கு கட்சி இணங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன முன்னணியின் அதிருப்தி!  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமா, 21வது அரசியலமைப்பு திருத்தம் ...!

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், புதிதாக நியமிக்கப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ளது.

திருத்தச் சட்ட வரைவு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை

Previous Story

மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்திடீர் விலகல்

Next Story

அருந்திக்க பர்ணாந்துவை காணவில்லை!