21:ஜெயிப்பது ராஜாக்கள்தான்!

-நஜீப்-

ஜனாதிபதி அதிகாரங்களை விட்டுக்கொடுக்கப் போகின்றார். இரட்டைப் பிரசைகளுக்கு அரசியல் செய்ய முடியாதவகையில் திருத்தங்கள் 19து பிளஷாகி 21 என வருகின்றது. என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் நமக்கு வரும் தகவல்படி மொட்டு அணியினர் அதற்குத் தயாரக இல்லை என்று தெரிகின்றது.

நீதி அமைச்சர் விஜேதாச முன்வைத்த திருத்தம் அமைச்சரவையால் கூட அங்கிகரிக்கப்படவில்லை. ஆளும் தரப்பே அங்கிகரிக்காத யோசனைகள்தான் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

மொட்டுக் கட்சி செயலாளர் சாகல காரியவாசம் ரணிலை நாங்கள் பிரதமராக்கியது பொருளாதார விடயங்களை கவனிப்பதற்கு.

யாப்புத் திருத்;தம் அவருடைய வேலையல்ல என்று கூறுகின்றார். ராஜபக்ஸாக்களும் அவர்கள் கையாட்களும் ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்பட்டால் தமக்கு ஆபத்து எனக் கருதுகின்றார்கள்.

13 பிளசுக்கு நடந்த கதைதான் 21க்கும் நடக்கப்போகின்றது. சபைக்கு வந்தாலும் இதனைத் தோற்கடிக்க ராஜாக்களுக்கு 76 வாக்குகள் போதும். அது அவர்களுக்கு இருக்கின்றது. தேவையானால் காசுக்கு வாங்கவும் முடியும்.!

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 29.05.22

 

Previous Story

வாழைப்பழம்: ஜாக்கிரதை!

Next Story

74 வயதில் O/L பரீட்சை எழுதிய சந்திரதாச!