சரிந்த கச்சா எண்ணெய் விலை

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம்- டிரம்ப் !

அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரியத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி வருகிறது என்று கூறி கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது. இரு நாடுகளும் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்து வந்தன. “ட்ரம்ப் சொன்னவுடன் மறுத்த ஈரான்” இதைத்தொடர்ந்து, இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்ததால் கடும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேல் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையால் உச்சகட்ட கோபமடைந்த ஈரான், கத்தாரில் தோகாவில் உள்ள அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அல்-உதெய்த் விமான தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

ஆனால், இந்த தாக்குதலை கத்தார் சமாளித்துவிட்டதாகவும் பெரிய அளவு பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Crude oil price hits $65.85 per barrel after OPEC, Non-OPEC meeting

ஆனால், தற்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. “வெளியே போகவே வேண்டாம்.! இதில் ஒரு நல்ல செய்தியாக, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக அதிகரித்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

Oil price, oil, crude oil, oil container, oil export

டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5 சதவிகிதம் சரிந்து, 68 டாலராகக் குறைந்துள்ளது. இந்த விலை, போர் தொடங்கிய நாளான ஜூன் 12 ஆம் தேதியில் இருந்ததைவிட மிகவும் குறைவாகும்.

Previous Story

டரம்ப் சமாதானா பேச்சுக்கு அழைப்பு! வாய்ப்பே கிடையாது ஈரான் அதிரடி!

Next Story

ஈரானுக்கு ஏன் உதவவில்லை; காரணத்தை கூறுகிறார் புடின்