அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதை, ஏர் இந்தியா நிறுவனம் விபத்து என்று குறிப்பிடாமல் சம்பவம் என்று குறிப்பிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் விமான விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2 பைலட், 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என்று மொத்தமாக 242 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலெயே விமான நிலையம் அருகில் இருந்த மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

“விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்திற்குள் இருந்தது யார் யார்? வெளியானது லிஸ்ட் ” விமானம் கீழே விழுந்து நொறுங்கிய வீடியோ வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் மொத்தமாக 11 குழந்தைகள், 2 கைக் குழந்தைகள் உட்பட 230 பயணிகள், 2 பைலட்கள் மற்றும் 10 விமான பணியாளர்கள் என்று 242 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விமான டேக் ஆஃபான சில நிமிடங்களிலேயே சிக்னலை இழந்துள்ளது. அனுபவம் வாய்ந்த பைலட்டான சுமீத் சபர்வால் மற்றும் கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் கேப்டன் சுமீத்திற்கு 8,200 மணி நேரம் பறந்த அனுபவமும், கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேரம் பறந்த அனுபவமும் இருந்திருக்கிறது.

அனுபவம் வாய்ந்த பைலட்கள் இயக்கிய விமானம் எப்படி விபத்தை சந்தித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் சிக்கிய சில நிமிடங்களிலேயே உடனடியாக மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். பயணிகளை மீட்டு வரும் நிலையில், அவர்கள் விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விமானம் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் ஏர் இந்தியா நிறுவனம் பதிவிட்ட ட்வீட் பல்வேறு விவாதங்களை தொடங்கி இருக்கிறது.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பறந்த விமானம் AI171 இன்று (ஜூன் 12,2025) ஒரு சம்பவத்தில் சிக்கியது. இதனை ஏர் இந்தியா உறுதி செய்கிறது.. இதுதொடர்பான விவரங்களை விரைவில் பகிர்வோம் என்று பதிவிடப்பட்டது.
இந்த விவகாரத்தை விபத்து என்று குறிப்பிடாமல், சம்பவமாக கருதி இருப்பது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.





