மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் என்பிபி. அதிக ஆசனங்ககளை பெற்றிருந்தாலும் அதில் பலவற்றில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதில் ஆளும் தரப்புக்கும் எதிரணிக்கும் நெருக்கடி நிலை இருக்கின்றது.
இந்த நிலையில் மொட்டு, தொலைபேசி, யானை கட்சிகளைத் தவிர்ந்த கட்சிகள் குழுக்களுடன் நாம் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரமுடியும். அதே நேரம் எவரும் பெரும்பான்மையை நிரூபித்து அங்கு ஆட்சி அமைக்க முயன்றால் நாம் அதற்கு முட்டுக் கட்டை போடப்போவதில்லை.
வெற்றி பெற்றவர்களுடன் கூட்டணிபோட்டு ஆட்சி அமைப்பதா? அல்லது தோற்றுப் போனவர்கள் ஒன்றுகூடி ஆட்சியை அமைப்பதா என்று தீர்மனம் எடுக்கும் உரிமையும் இருக்கின்றது.
இப்படி ஒரு அறிவிப்பை விடுத்திருக்கின்றார் ஜேவிபி. செயலாளர் அல்லது கோட்பாதார் டில்வின் சில்வா.
நாம் அறிந்த வரை இது தொடர்பாக என்பிபி. உயர் மட்டம் இன்னும் சில மணி நேரத்தில் ஒன்று கூடி ஆரய இருப்பதாக ஒரு தகவல்.





