2027 ல் அதிரடித் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் வருகிறதாம்!

நஜீப் பின் கபூர்

நன்றி 15.11.2026  ஞாயிறு தினக்குரல் 

NPP Srilanka | Battaramulla

அதிரடி தேர்தல் என்றாலே அது வைரலாகின்ற ஒரு செய்தியாக அமையும். தலைப்பு பரபரப்பான ஒன்றாக இருந்தாலும் நாம் இங்கு தெரிவிக்கின்ற கருத்துக்கள் அனைத்தும் நம்முடையதல்ல. பொதுவாக வருடக்கணக்காக நாம் எழுதி வருகின்ற கட்டுரைகள் அனைத்திலும் போல எமது சொந்தக் கருத்துக்களை மையமாக வைத்தே தகவல்களைச் சொல்லி வந்திருக்கின்றோம்.

ஆனால் இந்தக் கட்டுரை அதிலிருந்து சற்று வித்தியாசமான ஒன்றாக அமையலாம். மேலும் அந்தக்கருத்துக்களில் நாம் உடன்படுகின்ற தகவல்களும் இருக்கின்றன. முரண்படுகின்ற தகவல்களும் இருக்கின்றன என்பதனை முதலில் ஒரு குறிப்பாக இங்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

Sajith says SJB only force capable of rebuilding Sri Lanka | Daily FT

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று (2029) வருடங்கள் இருக்கின்றன. அதே போன்ற எப்போதோ நடந்து முடிந்திருக்க வேண்டிய மாகாணசபைத் தேர்தல்களும் பல வருடங்களாக நிலுவையில் இருக்கின்றன.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2027ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றார். அனேகமான ஊடகங்கள் இன்று அது பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் நாம் கடந்த வாரமே 2027 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான பல தகவல்களை முன்கூட்டி சொல்லி இருந்ததால் நமக்கு இந்த தலைப்புத் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதில் எந்த மனக்குறைகளுக்கும் வாய்ப்பில்லை என்பது எமது நிலைப்பாடு.

எப்படியும் 2027ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் என்பிபி அரசின் தீர்க்கமான ஒன்று என்பதனையும் நாம் முன்கூட்டியே எமது வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். இப்போது நாம் குறிப்பிடுகின்ற அதிரடி ஜனாதிபதி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.

சிலர் 2029ல் நடக்க இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடாத்தி அரசு மேலும் ஐந்து வருடங்கள் தமது இருப்பை உறுதி செய்து கொள்ள முனைகின்றது. அதற்கு அவர்கள் கூறுகின்ற பிரதான காரணம் ஜனாதிபதி அனுரகுமாரவின் ஜனரஞ்சகமும் எதிரணியில் அவருக்கு ஈடான ஒரு வேட்பாளர் இல்லாமல் போட்டி தனிக்குதிரை ஓட்டமாக இருக்கும் என்பது. இதில் நமக்கும் உடன்பாடு இருக்கின்றது.

ஆனால் அப்படி ஒரு தேர்தல் அறிவிப்பு வந்தால் நிச்சயமாக இன்று பிரதான எதிரணி அரசியல் செயல்பாட்டாளர்களாகவும் அரசியல் கட்சிகளை வைத்திருப்பவர்களான சஜித்தும் மொட்டு நாமலும் இணைந்து ஒரு வேட்பாளரை களமிறக்கும் ஏற்பாடுகளும் அரசியல் அரங்கில் முன்வைக்கப்படும் என்பது நமது வலுவான கருத்து. ஆனால் அப்படி ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு 2027ல் வாய்ப்பு மிக மிக கம்மி. இது நமது நிலைப்பாடு.

அப்படியானால் வருகின்ற 2027 மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் என்ற இந்த கதை எப்படி பிறந்தது என்பதை சற்றுப்பார்ப்போம். நாம் ஊர்பெயர் சொல்ல விரும்பாத எதிரணியினருக்கு சாதகமான கருத்துக்களை விதைக்கின்ற பல சிங்கள ஆங்கில சமூக ஊடகவியலாளர்கள் இது பற்றிய செய்திகளை பரவலாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் சொல்கின்ற தகவல்களின் படி அரசு உளவுத்துறை மற்றும் அரச ஆதரவு ஆய்வாலர்கள் ஜனாதிபதியினதும் அரசினதும் செல்வாக்கு-ஜனரஞ்சகம் பற்றி மேற்கொண்ட கருத்துக்கணிப்புக்களில் கிடைத்த தகவல்கள் ஆரோக்கியமானதல்ல என்று தெரிய வருவதால் மேலும் தாமதிப்பது ஆபத்தானது என்பதால்தான் என்பிபி-ஜேவிபி முன்கூட்டி தேர்தல் பற்றிய தமது வாதத்துக்கு நியாயம் கற்பிக்க முனைகின்றார்கள். வேடிக்கை என்னவென்றால் அவர்களே தமது செய்தியின் முடிவில் 2027ன் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் வராது என்றும்  சொல்லி இருக்கின்றார்கள்.

Elections in Sri Lanka: 2024 Presidential Elections

நமக்கும் கற்பனை செய்ய உரிமைகள் இருப்பது போல மற்றவர்களுக்கும் அந்த உரிமைகள் இருக்க வேண்டும். அதற்காக அவர்களும் நாமும் கூட என்னென்ன கதைகளைப் புனைகின்றோம்?. அதன் யதார்த்தங்கள் என்னவென்பதனை வாசகர்கள் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.

அதற்காக பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தின் மீது இருந்த செல்வாக்கு அதன் தற்போதய நிலை என்பன பற்றி நமக்கு எதுவும் தெரியாது.! காரணம் அப்படியான ஒரு ஆய்வை நாம் இதுவரை புதிதாக செய்து பார்க்கவில்லை.

மேலும் அவர்கள் குறிப்பிடுகின்ற உளவு அறிக்கைகள் மற்றும் அரசு செய்ததாக சொல்லப்படுகின்ற கருத்துக்கணிப்புகள் எப்போது எப்படி இவர்கள் கைகளிலுக்குப் போனது? மேலும் அரசு இரகசியமாக செய்ததாக சொல்லப்படுகின்ற கருத்துக்கணிப்பை செய்த நிறுவனம் எது.? என்ற கேள்விகளையும் நாம் எழுப்புகின்றோம்.

ஆனால் நாட்டில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் சடுதியாக வரவேண்டும் என்ற அரசியல் இயக்கங்களும் பொது மக்களில் ஒரு பகுதியினரும் இருக்கின்றார்கள். இது இயல்பானதும் மக்களினதும் எதிரணியினரதும் எதிர்பார்ப்பும்தான். ஆனால் இது இன்னும் ஒட்டுமொத்த குடிமக்களின் எதிர்பார்ப்பாக மாறவில்லை. ஒரு போதும் அப்படி ஒரு நிலை வராது.

Money Laundering Charges Filed Against Namal Rajapaksa Over HelloCorp Deal - Colombo Telegraph

என்பிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றாலும் மொத்த வாக்காளர்களில் 62 சதவீதம் அளவில் தான் அவர்கள் பெறமுடிந்தது. எனவே 38 சதவீதமானவர்கள் இவர்களுக்கு எதிராக வாக்குப்போட்டவர்கள். (சஜித் அணி 17சதவீதம்) எனவே அவர்களின் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும்.

அரசியல் யாப்பின் அடிப்படையில் 2029ல் தான் ஜனாதிபதித் தேர்தல். கோட்டாபே ராஜபக்ஸ நாட்டிலிருந்து தப்பியோடிய போது கூட கிளர்ச்சியாளர்கள் தம்மில் ஒருவரை அதிகார கதிரையில் அமர்த்திக் கொள்ளவில்லை.

அதனால்தான் ஒரு ஆசனத்தை வைத்திருந்த ரணிலை அன்று மொட்டுக் கட்சியினர் சட்டரீதியாக ஜனாதிபதி கதிரையில் அமர்த்தி எஞ்சி இருந்த அந்தப் பதவிக் காலத்தை நிறைவு செய்தனர். அப்படி யாப்பை மதிக்காமல் கிளர்ச்சியாளர்கள் தம்மில் ஒருவரை அதிகாரத்தில் அமர்த்தி இருந்தால் அது புரட்சிகர அரசாக அமைந்திருக்கும். குடிமக்களும் பாமர ஜனங்களும் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லை இல்லை வருவது அதிரடி ஜனாதிபதி தேர்தல் அல்ல மாகாணசபைத் தேர்தல்தான்.! இதனையும் அதே ஆய்வாளர்கள்தான் கூறிவருகின்றார்கள். இப்போது அதுபற்றி அவர்கள் தெரிவிக்கின்ற தகவல்களை பார்ப்போம்.

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே நமக்கு மாகாணசபைத் தேர்தல் வந்தது என்பது அரசியல் மொண்டசூரி கற்று வருகின்ற சிறு குழந்தை கூட அறிந்த செய்தி. ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் காரணமாக இந்த மாகாணசபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பையே செய்ய முடியாதிருக்கின்றது.

எனவே நாடாளுமன்றம் முதலில் இதனை சரி செய்து அதற்குத் தேவையான சட்டச்சிக்களை முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆனால் இன்றுவரை அந்த மாற்றங்கள் நிகழவில்லை. இந்தப் பின்னணியில்தான் இவர்கள் மாகாண சபைத் தேர்தல் பிரகடனத்தை முன்னறிவிப்புச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அனுர தலைமையிலான என்பிபி. அரசு மீது மக்கள் செல்வாக்கு கடும் வீழ்ச்சி என்று கூறும் மேற்குறிப்பிடுகின்ற அதே தரப்பு சொல்லும் செய்திகள் இவை. அதனால் அரசு தனது செல்வாக்கை கண்டறியவும் தற்போது எதிரணியினர் மத்தியில் இருக்கின்ற பிளவை தமக்குச் சாதகமாக பாவித்து 2027 மத்தியில் மாகாணசபைத் தேர்தலுக்கு செல்லப்போகின்றது.

இதனை ஜனாதிபதி தற்போது உறுதி செய்து வருகின்றார் என்பது அந்தக் கருத்து. அத்துடன் ஒன்பது மாகாணசபைகளையும் ஓரே நாளில் நடத்தாது 1988 மற்றும் 2008 நடாத்தியது போல அரசு இந்த மாகானசபைத் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடாத்த இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

அதன் படி முதல் கட்டமாக 1.வடக்கு 2.கிழக்கு 3.சப்ரகமுவ 4.மத்திய மாகாணசபைகளில் இந்தத் தேர்தல்கள் நடைபெறும் என்பது அவர்களின் அந்தக்கணக்கு. இதற்காக அவர்கள் கூறுகின்ற நியாயங்களை இப்போது பார்ப்போம்.

2027 வரவு செலவுத்திட்டத்தில் ஜனரஞ்சகமான சிறு சிறு அபிவிருத்திப் பணிகளை பரவலாக மேற்கொண்டு அதன் மூலம் கிராமப்புற மக்களை அரசு தன் பக்கம் ஈர்த்தெடுக்க முயல்கின்றதாம். பாதைகள் பாலங்கள் போன்ற திட்டங்களை இப்படி அமைப்பதன் மூலம் மக்கள் அரசுக்கு வாக்குப் போடுவார்கள் என்று அரசு எதிர்பார்க்கின்றதாம்.

Provincial Council Elections 2012 – Verité Research

கட்டம் கட்டமாக 1988 மற்றும் 2008ல் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் சப்ரகமுவ மாகாணசபை முதல் கட்டத்தில் தேர்தலை சந்தித்தது. இது தெற்கு வாக்களர்களின் உணர்வுகளை அளவீடு செய்யும் ஒரு முக்கிய மையமாக இருப்பதால் அதனை வைத்து ஏனைய தெற்கு பிரதேரச தேர்தல்கள் பற்றிய தீர்மனங்களை எடுக்கலாம் என்பது அரசின் எதிர்பார்ப்பாம்.!

வடக்கு மற்றும் கிழக்கில் அரசுக்கு பின்னடைவு என்று வந்தாலும் அது தெற்கில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டாதாம். ஆனாலும் எப்போதும் சிறுபான்மை சமூகங்கள் பதவியில் இருக்கின்ற அரசை வைத்தே தாம் சார்ந்த சமூக நலன்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதால் அரசு பதவியில் இருக்கின்ற இரண்டரை வருடங்களில் அரசுடன் இணைந்து கூடவே அவர்கள் மாகாணசபைகளை முன்னெடுத்து அங்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம். இது ஆளும் தரப்புக்கு ஒரு வாய்ப்பான நிலை. அதனை அரசு பாவிக்க முனைகின்றதாம்.!

அடுத்து அரசு மத்திய மாகாணத்திலும் முதல் சுற்றில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்றது. நுவரெலிய மாவட்டத்தில் மலையக மக்களின் வாக்குகள் இப்போது அரசுக்கு ஓரளவு கிடைக்கும். அதில் தெரிவாகும் உறுப்பினர்கள், மாத்தளை மாவட்டத்தில் வாக்குகள் மூன்றாகப் பிரியும். கண்டி மாவட்டத்தில் அரசுக்கு வாய்ப்பே கிடையாது.

ஆனாலும் முஸ்லிம் சமூகத்தினர் அங்கு தனித்து களமிறங்கி ஐமச.க்கு இருக்கும் வாய்ப்பை தட்டிப்பறித்து அரசுக்கு மறைமுகமாக ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். அப்படி வருகின்ற ஆசனங்களை வைத்து மத்திய மாகாணசபையில் என்பிபி. அரசு கூட்டாச்சி நடத்தலாம்.

Why Sri Lanka's Ruling NPP Has Not Abolished the Executive Presidency Yet – The Diplomat

கண்டி மாவட்டத்தில் தனித்துவத் தலைமைகள் எப்படி கரைசேர்ந்தது.? ஐதேக. செல்வாக்குடன் இருந்த காலங்கள் அவர்கள் தனித்து நின்று பெற்ற வாக்கு எண்ணிக்கை பற்றித் தெரிந்திருந்தால் இவர்கள் இப்படி கணக்கு பார்த்திருக்க மாட்டார்கள்.புள்ளிவிபர ரீதியில் இவர்கள் போடும் கணக்குகள் யதார்த்தமற்றது அல்லது ஏமாற்றுத்தனமானது.!

வாதங்களை முன்வைக்கலாம் புள்ளி விபரங்களைக் காட்டி தர்க்கம் பண்ணலாம் அந்தத் தர்க்கங்கள் புள்ளி விபர கருத்துக்கள் எந்தளவு ஏற்புடையது யதார்த்தமானவை என்பதை குடிமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வடக்கில் தமிழரசுக் கட்சியிலிருந்து முப்பது அல்லது நாற்பது சதவீத மாகாணசபை உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள். ஆளும் என்பிபி. ஏறக்குறைய தமிழரசுக் கட்சிக்கு சமனான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

எனவே அவர்கள் தாம் இரண்டாம் இடத்துக்கு வந்தால்கூட அது போதுமானதாக அமையும். அதனை வைத்து தமிழரசுக் கட்சியுடன் ஒரு கூட்டரசாங்கத்தை வடக்கில் அமைக்கலாம். கிழக்கிலும் இதே நிலைதான். அதனால் அங்கும் சிறுபான்மை சமூகங்களுடன் இணைந்து மாகாணசபையை அமைக்கலாம்.

இது வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நியதியாம்.!  2027 நடுப்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் வருகின்றது என்பவர்கள் இப்படித்தான் கணக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அதிரடித் தேர்தல் பற்றிய கருத்துக்கள் எதிரணி அரசியல் கட்சிகளின் பரப்புரை என்று நாம் துவக்கத்தில் இருந்தே சொல்லி வருகின்றோம். இந்தக் கதையை சற்றுப்பாருங்கள்.

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் டி பெரேரா 2027 ஜனவரியில் நடைபெற இருக்கின்ற மாகாணசபை தேர்தலில் தான் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க இருப்பதாகவும் நளின் பண்டார வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகின்றார். அதனால்தான் இப்போது அவருக்கு எதிரான தாக்குதல் துவங்கி இருக்கின்றது என்று அஜித் குறிப்பிடுகின்றார்.

2024 Sri Lankan parliamentary election - Wikipedia

ஆய்வுகளின் படி அரசுக்கு நாட்டில் 30 சதவீதமான ஆதரவு கூட இல்லை என்று கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்ற சமூக ஊடகங்கள் கதைகளை புனைந்து கொண்டிருக்கின்றன.

இந்த அதிரடி மாகாணசபைத் தேர்தல் பற்றி பரப்புரை செய்பவர்கள் 2027 மத்தியில் தேர்தல் என்று கதை விடுகின்ற அதே நேரம் அஜித் டி பெரேரா 2027 ஜனவரியில் மாகாண தேர்தல் என்று ஊடகங்கள் முன் பேசிக்கொண்டிருக்கின்றார்.

2017ல் அதிரடி ஜனாதிபதி-மாகாண சபைத் தேர்தல்கள் என்பது சிலரது எதிர்பார்ப்புக்களும் கனவுகளாகவும் இருந்தாலும் அப்படி தேர்தல் வருகின்றது என்று வைத்துக் கொண்டாலும் இவர்கள் எதிர்பார்ப்பது போல அரசு இடிந்து விழும் என்பதும் அரசுக்கு இன்று மக்கள் மத்தியில் 30 சதவீத ஆதரவு கூட இல்லை என்ற கருத்துக்கள் எந்தளவுக்கு ஏற்புடையது.?

அப்படியாக இருந்தால் அவர்கள் கணக்குப்படி எழுபது (70) சதவீத ஆதரவு பெற்று இப்போது எழுச்சி பெற்று வளர்ந்திருக்கின்ற அரசியல் கட்சி எது என்பதை இந்த ஆய்வாலர்கள் மக்களுக்கு அறிமுகம் செய்யாது விட்டது ஏனோ?

இது அரசு ஒரு மாதம் கூட நீடிக்காது ஆறு மாதங்கள் நீடிக்காது என்று எதிரணியினர் விட்ட கதைகளுக்குச் சமமான செய்திகளாகத்தான் இருக்க வேண்டும். தேர்தல் கனவில் சஞ்சரிப்பவர்கள் அப்படியே சிலகாலம் இருந்து விட்டுப்போகட்டும்.

Previous Story

මේක නම් පිස්සු හැදෙන කතාවක් Gaddafi

Next Story

பராக் ஒபாமா மீது டிரம்ப் மோசமான