2026 மார்ச்சுக்கு முன்னர் தேர்தல்!

நஜீப்

நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டியுள்ளது. அமுலில் இருந்த விகிதாசாரத் தேர்தல் முறை சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதுகாப்பாக இருந்தது. முன்னைய அரசு அதில் கைவைத்தது.

இப்போது புதிய திருத்தங்களுக்கு அமைச்சரவை வாய்ப்பளித்துள்ளது. அது எப்படி அமையும் எனத்தெரியாது. எனவே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரனைக்கு ஓடித்திரிந்து சிறுபான்மை கட்சிகள் மூக்குடைபடுவதை விட பழைய ஒழுங்கில் தேர்தலை நடாத்துவதற்கு அவை ஐக்கியப்பட்டு ஒரு பிரேரணையைக் கொண்டுவர முயற்சிகளை செய்வது நல்லது.

அரசும் இதனை எதிர்க்கும் என்று சொல்ல முடியாது. அதே நேரம் வடக்கு முதல்வர் வேட்பாளராக சுமந்திரன் தன்னைத் தானே அறிமுகம் செய்து வருகின்றார். அவர் மீது மக்களுக்கு நல்லெண்ணம் கிடையாது. முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 2026 மார்ச்சுக்கு முன்னர் தேர்தல் வரலாம் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Previous Story

புதினின் மலத்தை சேகரிக்க சூட்கேஸ்!

Next Story

ஹர்த்தாலுக்கு கடையைப்பூட்டு