2025:உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்!

-நஜீப் பின் கபூர்-

<p>did a great job and took input. By far the cleanest looks. thx </p>

ஜனாதிபதி மற்றும் எல்பிட்டிதேர்தலுக்கு சமாந்திரமான முடிவுகள்!

90 வீதத்துக்கும் மேலான வட்டாரங்களில் அரச தரப்பு வெற்றி!

கொழும்புMC  கண்டிMC யாழ்ப்பாணம்MC கடும் போட்டி!

வேட்புமனு கையளிக்கப்பட்டு சில மணி நேரங்கள் கூட இன்னும் கடந்து போகவில்லை. அப்படியான ஒரு நேரத்தில் எப்படித் தேர்தல் முடிவுகள் பற்றி கருத்துச் சொல்ல முடியும் என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

ஆனால் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேல் நாம் துல்லியமான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கின்றோம். நம்மைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு-நமது கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு இது மறந்து போக நியாயமில்லை.

அதே ஆய்வுகளில் இப்போதும் நாம் தொடர்ந்தும் இருப்பதால் இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை நாம் இங்கு வெளியிடுகின்றோம். எனவே தேர்தல் முடிவுகள் வரும் போது நமது கணிப்புக்களை ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.

50 க்கு 50

ஐம்பதுக்கு ஐம்பது என்று நாம் உபதலைப்புக் கொடுத்திருக்கின்றோம். அதற்கான விளக்கம்தான் இது.
உள்ளூராட்சி தேர்தல் விதிகளின்படி வருகின்ற இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் ஆளும் தரப்பு அதாவது அனுரவின் அணி குறிப்பிட்ட சபையில் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்றாலும் தேர்தல் சட்ட விதிகளின்படி கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற விகிதசார அடிப்படையில் ஆசனங்கள் பகிர்வதால்-கிடைப்பதால் குறிப்பிட்ட சபைக்கு போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு ஏற்ப ஆசனங்கள் கிடைக்கும்.அந்த வாய்ப்பு இந்தத் தேர்தலில் எதிரணிகளுக்கு அல்லது குழுக்களுக்குத்தான் இருக்கின்றன.

இதற்கு நல்ல முன்னுதாரணம்தான் எல்பிடிய தேர்தல் முடிவுகள். அந்த முடிவுகளை வைத்துக் கொண்டு அனுர அணி அல்லது என்பிபி. செல்வாக்கு குறைந்து விட்டது என்று எதிரணியினர் கதை விட்டதை நமது வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் என்ன நடந்தது.?

அத்துடன் ஒரு தனித்துவ அரசியல் தலைவர் (ஹக்கீம்) மூன்றும் மூன்றும் ஆறு அல்லது ஒன்பது அதற்கு மேல் வராது இது எளிமையான கணிதம் என்று சமூகத்துக்கு பாடம் சொல்லி பொதுத் தேர்தலில் அனுர தரப்பு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஒரு போதும் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி மூக்குடைபட்டது அனைவருக்கும் தெரியும்.

அனுர வெற்றி பெற்றால் நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது என்று சொன்னவர்கள். அனுர வழங்கிய நோன்பு திறப்பு வைபவத்தில் (இப்தாரில்) எந்த முகத்தை எடுத்துக் கொண்டு கலந்து கொண்டார்கள் என்று சமூகம் சிந்திக்க வேண்டும்.

அதே ஆட்கள் இந்தத் தேர்தலிலும் அனுர அரசு மீது இனவாதத்தை கிளப்பி அவர்கள் சார்ந்த சமூக வாக்குகளைக் கொள்ளையடிக்கின்ற ஒரு முயற்சில் இறங்கி இருக்கின்றார்கள்.

நாம் தேசிய மட்டத்தில் மேற்கொண்ட கருத்துக் கணிப்புக்களின் படி நாட்டிலுள்ள தொன்நூறு சதவீதமான சபைகளில் ஆளும் என்பிபி.யே முன்னணியில் இருக்கின்றது. ஆனாலும் அவர்கள் அந்த சபைகளில் உள்ள அனைத்து வட்டாங்களிலும் வெற்றி பெற்றாலும் எதிரணியினர் பெற்ற வாக்குகளுக்கு ஆசனங்கள் பகிர்கின்ற போது அதில் அதிக வாய்ப்புக்களை சஜித் அணிக்கு கிடைக்கும். எனவே நாட்டிலுள்ள மொத்த உள்ளூராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கின்ற போது அவர்கள் இரண்டாம் இடத்துக்கு வருவார்கள்.

வடக்குக் கிழக்கில் சில சபைகளை தமிழ் தரப்புக்கள் வெற்றி கொள்ள முடியும். ஆனாலும் ஜனாதிபதி அனுரவின் என்;பிபி. தமிழ் தரப்பினருக்கு மிகப் பெரிய போட்டியாளர்களாக இருப்பார்கள். குறிப்பாக யாழ். மாநகர சபையையாவது தமிழ் தரப்புக்கள் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

குறைந்த பட்சம் தெற்கில் கொழும்பு கண்டி என்ற மாநகரங்களையாவது வெற்றி கொள்ளும் ஒரு முயற்சியில் எதிரணி குறிப்பாக சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கி இருப்பதாகத் தெரிகின்றது. தேர்தலுக்குப் பின்னர் இதற்காக மொட்டு அணியுடன் வேண்டுமானாலும் இவர்கள் கூட்டணிக்குத் தயாராக இருக்கின்றார்கள்.

தமக்கு தேர்தல் விதிகளின்படி கிடைக்கின்ற இந்த ஆசனங்களை வைத்துக் கொண்டு எதிரணியினர் எல்பிடிய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மேற்கொண்ட பிரச்சாரங்களை இந்த முறையும் மேற்கொள்வார்கள் என்பது தெளிவு. இது சிறுபிள்ளைத்தனமானது. ஆனால் இந்த விடயத்தில் சிங்கள சமூக வாக்காளர் தெளிவான புரிதலுடன் இருக்கின்றார்கள்.

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இன்னும் சில மாதங்களில் மாகாணசபைத் தேர்தல் வர இருக்கின்றது. அப்போது மீண்டும் கடந்த பொதுத் தேர்தலுக்கு சமமான ஒரு முடிவுதான் வரும். நமது இந்த கணக்குகளை தேர்தல் முடிவுகள் வரும் போது நமது வாசகர்கள் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள முடியும்.!

Previous Story

2025 உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கண்டி மாவட்டம்

Next Story

பாததும்பற அகுரண SLMC வேட்புமனுக்கள் OUT !