-நஜீப் பின் கபூர்-
ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகப் பெரும் வெற்றி!
மந்த புத்திக்காரர்கள் குறுயீடுதான் கரகோசம்!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு 100 இலட்சம் வாக்குகள்; அவருக்குத்தான் வெற்றி. அவர்தான் ஜனாதிபதி. ரணிலுக்கும் சஜித்துக்கும்தான் போட்டி அனுராவுக்கு மூன்றாம் இடம். இப்படி நமக்கு கதை சொன்னவர்களும் இருந்தனர்.
50 இலட்சம் பெற்றவனுக்கு 60 இலட்சத்துக்குப் போவது லேசா? மூன்று இலட்சம் பெற்றவனுக்கு அந்த இலக்குக்குப் போவது லேசான காரியமா இப்படி சமூகத்துக்கு அறிவுரை-கதை சொன்னது மு.கா.தலைமை!
அனுர வந்தால் பெரஹர கிடையாது பௌத்த குருமாருக்குத் தானம் கிடையாது, முஸ்லிம்களுக்கு நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது கத்னா கிடையாது என்று தலைவர்கள் முழங்க அதற்கும் கைகெட்டி விசிலடிக்க ஒரு கூட்டம் இருந்தது.
இப்போதும் அதுபோல ஆயிரம் ஆயிரம் கதைகள். ஆனால் சமூகம் அவற்றை காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
அதனால்தான் தெற்கு வடக்கு கிழக்கு என்று மக்கள் அனுரவுடன் கடல் அலையாக. இது பலருக்கு மிகுந்த வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
அதனால்தான் இந்தக் கதறல்கள். அவற்றை பெரிதாகக் கண்டு கொள்ளத் தேவையில்லை. கடந்த தேர்தலில் இவர்கள் எங்கு இருந்தார்கள்.?
அது அப்படி இருக்க, இப்போது சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த ஐதேக. கட்சி மா நாட்டில் நமக்குத்தான் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிகப் பெரும் வெற்றி வருகின்றது என்று ஹக்கீமின் ஞானி ரணில் கதை சொல்ல அதற்கும் அங்கிருந்தவர்கள் கைகொட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்திருக்கின்றார்கள்.
பொது மக்களே இவர்கள் பற்றி நீங்கள் என்னதான் நினைக்கின்றீர்கள். நாட்டில் மொத்த சனத் தொகையில் மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர்கள் கணக்கைத்தான் இது கோடிட்டுக் காட்டுகின்றது. நம்முடைய இந்தக் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் அதுவும் உங்கள் ஜனநாயக உரிமை.
மே ஆறு என்று ஒரு நாள் விடியலுக்கு வரத்தானே போகுது. அப்போது பார்ப்போம் யதார்த்தத்தை. அது வரைக்கும் ரணில் பேச்சை 2025 ஆண்டுக்கான மிகப் பெரிய நகைச்சுவை என்று கார்டியன் நாமம் சூட்டுகின்றது.