2023 வரவு செலவுத்திட்டம் 84/121

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்  37 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு  ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் | Budget 2023 Sri Lanka

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த ஏழு நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

Previous Story

உடதலவின்ன - கல்ஹின்ன ஊடக பிரதானிகள் சந்திப்பு!

Next Story

கத்தார் கால்பந்து  அரேபியா:2 அர்ஜென்டினா:1