2022 இலங்கைக்கு மிக கஷ்ட காலம்-ஐ.நா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பெரும் பிரச்சினைகளை இலங்கை எதிர் கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை பாரிய அளவில் உள்ள போதும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மத்திய வங்கிகள் கடந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியில் வட்டி விகிதத்தை அதிகரித்தன என அந்த அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிதி மற்றும் விலைகளின் ஸ்திரத்தன்மையினை பேணுவது கடினமான விடயமாக இந்த நாடுகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Story

இந்தியா அழுத்தம் இலங்கை சரண்?

Next Story

பன்றி இதய மனிதன் கதை ?