2022:உலக மக்கள் தொகை 780

புத்தாண்டு நாளான இன்று உலக மக்கள் தொகை 780 கோடியை எட்டும்என, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2021 ஜன., 1ல் உலக மக்கள் தொகை 772 கோடியே 60 லட்சமாக இருந்தது; இது, 0.9 சதவீதம் அதிகரித்து 2022 ஜன., 1ல், 780 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதே காலத்தில் அமெரிக்க மக்கள் தொகை 7 லட்சத்து 7,000 ஆக அதிகரித்து 33 கோடியே 24 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு உலகளவில் ஒரு வினாடிக்கு 4.3 குழந்தைகள் பிறக்கும்; இருவர் இறப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.


இந்தாண்டு அமெரிக்க மக்கள் தொகை 40 வினாடிகளுக்கு ஒருவர் வீதம் அதிகரிக்கும். பிறப்பு, இறப்பு, குடிபெயர்வோர் ஆகியோரின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Previous Story

கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள்; இந்தியாவுக்கு அளிக்கிறது இலங்கை

Next Story

உக்ரைன் பிரச்சனை - பைடன் மோதல்