20 க்கு 20 வெற்றி யாருக்கு! ரிசாட் கைது நாடகமா!

நஜீப் பின் கபூர்
20 கை உயர்த்துபவர்கள் குடும்பங்கள் சாபத்துக்கு ஆளாகும்
கெவிட் 19 வைரசைவிட திருத்தம் 20 மிகவும் கொடூரமானது
சிலபேர் ஜனாதிபதியைப் பிழையாக வழி நடாத்துகின்றார்கள்
20 தால் அரச செல்வாக்கு 10 சதவீதம் சரிவடைந்திருக்கிறது
ஒசாமா பின்லாடன் போல் ஊடகங்கள் ரிசாடை சித்தரிக்கின்றன

நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை இலங்கை அரசியலில் தீர்க்கமான ஒரு நாள். அதற்கு இன்னும் 24 மணி நேரங்கள் எஞ்சி இருக்கின்றன. அன்று திகதி 20. இலங்கை அரசியல் யாப்பில் 20ல் சொல்லப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக நீதி மன்றத் தீர்ப்பை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அப்போது நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிக்க இருக்கின்றார். இந்த தீர்ப்பு என்ன என்பது ஐவர் அடங்கிய நீதி மன்றம் அவருக்கு கடந்த 10ம் திகதி கையளித்திருக்கின்றது. எனவே தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பான தகவல்கள் ஜனாதிபதிக்கும் இப்போது தெரிய வந்திருக்கின்றது. எமக்கு இது தெடர்பாக வருகின்ற தகவல்களின் படி சில திருத்தங்கள் அல்லது நீக்கங்களை செய்து கொண்டால் 20 ஓக்கே என்றுதான் தெரிகின்றது.

ஆளும் தரப்புக்கு அதாவது ஜனாதிபதி தரப்புக்கு சாதகமாகத் தீர்ப்பு வருகின்றது என்று நாங்கள் எடுத்துக் கொண்டாலும். நீதிபதிகள் 20ல் சொல்லப்பட்ட எல்லா விடயங்களுக்கும் ஓகே போட்டிருக்க வாய்ப்புக்கள் இருக்காது என்று நாங்கள் எண்ணுகின்றோம். உதாரணத்துக்கு ஜனாதிபதி ஜீ.ஆர். பிரதமர் எம்.ஆர். ஆகியோரின் கணக்காய்வுகள் தொடர்பாக கணக்குக் கேட்க்கும் உரிமைக்கு விதிவிலக்கு போன்ற விடயம் இதில் ஏற்றுக் கொள்வதற்கு எந்த வகையிலும் நியாயம் இருக்காது என நாங்கள் நினைக்கின்றோம்.

சரி தீர்ப்பு முற்றிலும் 20க்கு அங்கிகாரம் கொடுத்து விட்டது என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் அதற்கு நாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இன்று ஆளும் தரப்பிலுள்ள பலர் இதற்குத் தமது கடுமையான எதிர்ப்பைத் பகிரங்கமாகக் காட்டி வருகின்றார்கள். இவர்கள் ஆளும் தரப்பு கூட்டத்தில் பல கேள்விகளைக் கோட்டுத் ரகலை பண்ணி இருக்கின்றார்கள். அனால் அங்கு ஜனாதிபதி ஜீ.ஆர். கடும் கோபத்தில் இருந்து இருக்கின்றார். பிரதமர் சில நேரங்களில் அங்கு நடக்கின்றவற்றைப் பார்த்து மௌனித்திருந்திருக்கின்றார். கருத்துக்களைச் சொல்பவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்திருக்கின்றது.

ஆளும் தரப்பிலுள்ள கணிசமானவர்கள் 20க்கு உடன்பாடில்லை என்று அந்தரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர்களது வாக்குகளை எப்படியாவது பெற்று 20 தை வெற்றி கொள்வதுதான் ஜனாதிபதி தரப்பினர் திட்டம். எனவே நாடளுமன்றத்தில் இரகசிய வாக்கு என்பதற்கு அவர்கள் உடன்பட வாய்ப்புக்கள் இல்லை. அதே நேரம் 20க்கு எதிராகப் பகிரங்கமாக கேள்விகளைத் தொடுத்தவர்களுக்கும் தங்களது மனச்சாட்சிப்படி 20தற்கு ஆதரவாக வாக்களிக்க இடம் கொடுக்காது. அப்படி அவர்கள் முன்னுக்குப் பின் முரனாக நடந்தால் மக்கள் முன் பெருத்த அவமானம் அவர்களுக்கு வரும். இது தொடர்பாக நடந்த ஆளும் தரப்புக் கூட்டத்திலிருந்து இடையில் சிலர் வெளியேறிவிட்டதாகவும் தெரிய வருகின்றது. பிரதமர் எம்.ஆர்.ஆதரவாலர்கள் 20 தொடர்ப்பில் பெரும் நெருக்கடிக்கும் அதிர்ப்திக்கும் இலக்காகி இருக்கின்றார்கள்.

20க்குப் பின்னர் புதிய அரசியல் யாப்பு வரும் என்று ஆளும் தரப்பு சொன்னாலும் புதிய ஒரு அரசியல் யாப்பைக் கொண்டு வருவோம் என்று ராஜபக்ஸ அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு போதும் அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று தான் நம்புவதாக ஜேவிபி தலைவர் அணுர குமார திசாநாயக்க குறிப்பிடுகின்றார். இப்போது இருப்பது ராஜபக்ஸாக்களுக்கு இருக்கும் பிரச்சினை அதிகாரத்தைத் தமது குடும்பத்துக்குள் எப்படிப் பங்கு கோட்டுக் கொள்வது என்பதுதான். இதற்கும் பொதுமக்கள் நலன்களுக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார்.

இது பைத்தியம் பிடித்த நாயை அவிழ்த்து விடுதல் போன்ற ஒரு செயல் இதற்குக் கை உயர்த்துபவர்களின் குடும்பங்கள் காலங்காலமாக இந்த அநியாயத்துக்கு உடந்தையாக இருந்ததற்காக சாபத்துக்குள்ளாவார்கள். எனப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கின்றார். விதுர விக்கரமநாயக்க களவு மோசடி செய்தல் மூட்டி விடுதல் போன்ற செயல்பாடுகள் கெபினட் அமைச்சைப் பெற்றுக் கொள்வதற்கான விஷேட தகைமைகளாக இருக்க வேண்டும். அது என்னிடம் இல்லை. நான் பதவிகளுக்காக வால் பிடிக்கின்ற ஒரு மனிதன் அல்ல. 20 விவகாரத்தில் தான் யாருக்கும் பயப்படப் போவதில்லை. எனது மனச்சாட்சிப்படியே நடந்து கொள்வேன் வாக்களிப்பேன் என்று அவர் சில தினங்களுக்கு முன்; ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

சிலர் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பிழையாக வழிநடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்துக்குள் சில டீல்காரர்கள் இருக்கின்றார்கள் என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என்று விதுர விக்கிரநாயக்க மேலும் விமர்சிக்கின்றார். வாசுதேவ நாணயக்காராவும் ஜனாதிபதியின் இந்த 20 தொடர்ப்பில் சில நியாயங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த 20 சொல்லப்பட்ட எல்லாக் கருத்துக்களிலும் எமக்கு உடன்படவும் முடியாது என்று பட்டும்டாமலும் இரு பக்கத்தையும் சமாளித்துப் பேசி வருகின்றார்.

இருவது திருத்தங்கள் தொடர்பில் நீதிபதிகள் கையளித்திருக்கின்ற தீர்ப்பில் சர்வசன வக்கெடுப்புக்கப் போக வேண்டும் என்று கடந்த வாரம் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அப்படியானால் கையளிக்கப்பட்ட அறிக்கை இப்போது எப்படி பகிரங்கமானது என்ற சந்கேம் ஏற்படுகின்றது. மேலும் இந்தக் கருத்தை முன்வைத்து சுமந்திரனும் கடந்த 11 ஞாயிறு யாழ்ப்பாணத்தில் நடந்திய ஒரு பத்தரிகையாளர் சந்திப்பு இருபதற்கு சர்வசன வாக்கெடுப்புதான் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு இந்தத் தகவல்களில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. எடுத்த எடுப்பிலே சர்வசன வாக் கெடுப்பு என்று நீதிபதிகள் சொல்லி இருப்பார்களா? அல்லது நாம் முன்சொன்னது போல சில திருத்தங்களுடன் சரி என்று சொல்லி இருப்பார்களோ தெரியாது.

தற்போது சிங்களப் பௌத்த குருமார்களும் நிகாயாக்களும் இந்த 20தால் பிளவு பட்டு நிற்க்கின்றன. கடும் போக்கு பௌத்த குருமார் ஜனாதிபதி ஜீ.ஆர் பக்கம் நிற்க்கின்றார்கள். பிரதமர் எம்.ஆருடைய ஆட்கள் விதி பிதுங்கி நிற்க்கின்றார்கள். எமக்குக் கிடைத்த பிந்திய தகவல் படி ஜனாதிபதி அனைத்துத் தரப்பையும் தமது பிடிக்குள் வைத்திருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது. எதிர்பை வெளியிட்டவர்களும் கூட்டுத் தீர்மானம் என்று தற்போது உச்சரிக்கத் துவங்கி இருக்கிறார்கள். இதனைத்தான் விமல் வீர வன்வவும் தற்போது பேசி வருகின்றார். என்னதான் பேசினாலும் வாசுவும் அப்படியான நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்.

களுத்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம உளவுப் பிரிவால் கைது செய்யபப்ட்ட ரிசாட் தம்பி ரியாஜ் அவர்களினாலேயே ஈஸ்டர் தாக்குதல் தொடர்ப்பில் எந்த விதமான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்த ஆதரங்கள் இல்லை என்ற காரணத்ததால் சில தினங்களுக்கு முன்னர் விடுதலை செய்திருக்கின்றார்கள். இந்த விடுதலைக்கும் 20வதற்க்கும் அரசியல் கொடுக்கல் வாங்கள்கள் இருக்கின்றன என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார் வெல்கம உயர் மட்ட அழுத்தம் இல்லாமல் அவர் விடுதலைக்கு அரவே வாய்ப்பு இல்லை என்று அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில் பகிரங்கமாக கூறி இருக்கின்றார்.

இந்த விடுதலை அரசியல் வட்டாரங்களிலும் சிங்களக் கடும் போக்களாளர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை உருவாகி இருக்கின்றது. இதிலிருந்து கவனத்தை திசை திருப்புக்கின்ற ஒரு ஏற்பாடாக இப்போது புத்தளத்தில் இருந்து வாக்காளர்களை மன்னாருக்கு வாக்குப்போட அழைத்துச் சென்றார் என்ற காரணத்தால் ரிசாடுக்கும் அவரது சகாக்கள் சிலருக்கும் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போது அவரைத் தேடி பல குழுக்கள் களத்தில் இறங்கி இருந்தாலும் இது வரை முன்னாள் அமைச்சர் ரிசாடைக் கண்டறிய முடியாமல் இருக்கின்றது. ஆனால் அவர் பாவித்த வாகானங்கள் அவர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டிருப்பதுடன் அவருக்குப் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ்காரர்கள் இருவரும் கடைமையைச் சரிவர செய்யவில்லை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பொவாகப் பார்க்கின்ற போது ராஜபக்ஸக்கள் காலத்தில் இது போன்ற நிதி மோசடிகள் தொடர்ப்பில் நிறையவே குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக அவர்களது தாய் தந்த அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட நினைவு கட்டடங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் இருந்தன. அதே போன்றுதான் அரசாங்கப் பணத்தை துஸ்பிரயோகம் செய்தார்கள் என்ற காரணத்தால் ரிசாடை இப்போது தேடி வலை விரித்திருக்கின்றது.

ரிசாட் கைது செய்யப்பட்டாலும் சில நாட்களின் பின்னரே அல்லது சில வாரங்களின் பின்னரே விடுதலை செய்யப்படுவதற்க்கும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்தப் பணம் முறைப்படி செழுத்தப்பட்டிருக்கின்றது. அதுவும் இந்த விவகாரத்துக்கும் ரிசாடுக்கும் எந்த நேரடித் தொடர்புகளும் இல்லை இது முறையாக நடந்த ஒரு விடயம் என்பது அவர்கள் வாதம். அதே நேரம் சஜித் தரப்பில் சிலர் இது அப்பட்டமான அரசியல் பலிவாங்கள் என்று கூறுகின்றார் இன்னும் சிலர் நாம் முன்பு சொன்னது போல் ஒரு பிழையை சரி செய்ய மற்றெரு பிழை நடந்து கொண்டிருக்கின்றது.

இது தெடர்பாக நாம் சில சட்டதரணிகளிடம் விளக்கம் கேட்ட போது இது பாரதூரமான விவகாரமே கிடையாது என்று உறுதியாகக் கூறி வருகின்றார்கள். இதனை விட எத்தனையோ பாரிய மோசடிகள் தொடர்பான வழக்குகள் தற்போது குப்பையில் இருக்கின்றன. இந்த முறையும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தத்தான் ரிசாடுக்கு எதிரான நடவடிக்கை அமைந்திருக்கின்றது. ஆளும் தரப்புக்கு ரிசாட் போக இருக்கின்றார் என்ற கதைகளுக்கு மத்தியில் அதற்கு முற்றிலும் மாற்றமாக இந்த கைது முயற்ச்சிகள் அமைந்திருக்கின்றன. இந்த கட்டுரை அச்சுக்குப் போக முன்னோ அல்லது அதற்குப் பின்னரே தனது சட்டத்தரணிகளுடன் ரிசாட் நீதி மன்றத்தின் முன் ஆஜராவர் என்று நாம் நம்புகின்றோம்.

ரிசாடைத் தேடுகின்ற சிஐடியினர் அவரது மனைவியிடம் நீண்ட வாக்கு மூலம் பெற்றிருக்கின்றார்கள்.
சாகர தேரர் ரியாஜ் விடுதலை தொடர்பாக பசிலுக்கும் ரிசாடுக்கமிடையே டீல் நடந்திருக்கின்றது என்று குற்றம் சாட்டுகின்றார் மேலும் நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற அரச காடுகள் அழிப்புத் தொடர்பாகவும் அவர் விரிவான தகவல்களை வெளியிட்டார். ஆனால் இதன் பின்னணியில் ஆளும் தரபினரே இருந்து வருகினறார்கள் என்பது குறிப்படத்தக்கது. . எல்லே குனவன்ச தேரரும் ஊடகங்களுக்கு வழங்கிய போட்டியொன்றில் தான் இந்த நாட்களில் பெரும் விரக்தியில் இருப்பதாகவும் பிரதமர் எம்.ஆர்.மீது இருக்கின்ற சின்ன நம்பிக்கையில்தான் இன்னும் பெருமையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

ராஜித இதற்குப் பின்னர் நாட்டில் இன்னும் அடக்குமுறை துரிதமடையும் என்றும் எச்சரித்திருக்கின்றார். ரிசாட் மீதான நடவடிக்கைகள் முற்றிலும் அரசியல் பலிவாங்கள் என்பது ராஜித கருத்து. இதே பாணியில் மனே கணேசனும் பேசி இருக்கின்றார். நல்லாட்சி காலத்தில் துவக்கத்தில் சில மாதங்களாவது ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கமிடையே நல்லுரவு இருந்தது. ஆனால் இந்த புதிய அரசாங்கத்தில் துவக்கமே பெரும் குழப்பமாகவும் தன்னலப் போக்குடையதாகவும் அமைந்திருக்கின்றது. இதற்க்கிடையில் ரிசாடைக் காலம் தாழ்த்தாது கைது செய்ய வேண்டும் என்று சட்டமா அதிபர் கட்டளை பிறப்பித்திருக்கின்றார்.

இந்த அரசாங்கத்திலுள்ள 100 மேற்பட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள். ரிசாட் தம்பி ரியாஜைக் கைது செய்யுமாறு கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்திருக்கின்றார்கள். நாட்டில் நீதி பொலிஸ்துறைகள் இருக்கின்ற போது அரசியல் வாதிகள் தங்கள் விரும்மிபிய வரு ஒருவரைக் கைது செய்ய எழுத்து மூலம் கடிதம் கொடுப்பது எந்த வகையில் தார்மீகமாக முடியும்.

ரிசாடுக்கு எதிரான இந்த சம்பவங்களினால் அவர் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மேலும் ஹீரோவாகவும் செல்வாக்குப் பெறவும் வாய்ப்புக்கள் அதிகம். இதற்கிடையில் ரிசாட் விவகாரத்தில் பல வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்தக் கொண்டு வருகின்றது என்றும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. பேரின ஊடகங்கள் ரிசாட் தேடுதலை ஒரு காலத்தில் ஒசாமா பின்லடனை உலகம் தேடியது போல சித்தரித்து சிங்கள மக்கள் மத்தியில் தமது ஊடகங்களைச் சந்ததைப் படுத்திக் கொண்டு வருகின்றன.

அரசின் முன்னுக்கப் பின் முறனான இந்த செயல்பாடுகளால் அளும் தரப்பு செல்வாக்கு மக்கள் மத்தியில் 10 சதவீதம் அளவில் சரிவடைந்திருக்கின்றது என்பது எமது அனுமானமாக இருக்கின்றது. இப்போதுள்ள நிலவரப்படி நாடாளுமன்றத்தில் 20க்கு இரகசிய வாக்கெடுப்பு என்றால் அது தோல்வி அடையும். சர்வசன வாக்கெடுப்பு என்றால் அரசு 20 விடயத்தில் பின்வாங்கும் என்பது எமது கருத்து. அந்த நிலையிலும் ஜனாதிபதிக்கும் பிரமதமருக்கும் அவர்கள் என்னதான் உடன் பிறப்புக்களாக இருந்தாலும் ஆதிக்கப்போட்டி நிச்சயம் வழுவடையும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

20 கதை முடிந்தது! கொனோவும் இதற்கு ஆதரவு!

Next Story

புதிய யாப்பும் விரும்பப்படாத விருந்தாளியும்