20 க்கு கைதூக்கியதற்கு     மக்கள் பணத்தில் (அரச செலவில்)        புனித ஹஜ் பயணமா?

-ஜஹாங்கீர்-

கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம்களுக்கும் உரிய முறையில் புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்க வில்லை.

இந்த வருடம் விண்ணப்பித்த இலங்கையர் பலருக்குப் பொருளாதரா நெருக்கடி காரணமாக அந்தப் புனித பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்குக் கடந்த காலங்களில் 4-5 இலட்சம் என்று இருந்த ஹஜ் கட்டணத் தொகை இந்த வருடம் 20 முதல் 25 இலட்சம் வரை என அரவிடப்படுவது முக்கிய காரணம் என்று நமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இதனால் இந்த முறை 1585 பேருக்கு அனுமதியை அரசு வழங்கினாலும் 970 பேர்வரையில்தான் புனித பயணத்தில் இணைத்திருக்கின்றார்கள். ஏற்பாடுகளை பௌத்த கலாச்சார அமைச்சே மேற்கொள்கின்றது. நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த ஹஜ் முகவர்கள் எண்ணிக்கை -73.

இதில் 49 முகவர்களுக்கு மட்டுமே பயணிகள் சேர்ந்திருக்கின்றார்கள். ஹஜ் ஒழுங்குகளை நெறிப்படுத்துவதற்கு (BUSSA) 68 பேருக்கும் பயணத்தில் வாய்ப்பு சவுதி அரசால் வழங்கப்பட்டிருக்கின்றது.

எனவே ஹஜ்ஜூக்கு ஹாஜிகளை முகவர்கள் அனுப்பி வைக்கின்ற எண்ணிக்கைக்கு ஏற்ப அதில் குறைந்தது ஒரு முகவருக்கு ஒரு பிரதிநித்துவமாவது வழங்கப்பட் வேண்டியது கட்டாயம். அதற்கான நல்ல வாய்ப்புக்களும் இருக்கின்றன. (68/49) இதில் தில்லு முல்லுகள் நடக்கக் கூடாது.

யாரந்த கருப்பாடுகள்!

இங்கு நாம் கேள்விப்படுகின்ற கேவலமான செய்தி என்னவென்றால் ஜனாதிபதி கேட்டாவுக்கு எல்லை மீறிய அதிகாரத்தையும் பசிலுக்கு நாடாளுமன்றப் பிரவேசத்துக்கும் பாதையும் சமைத்து நாட்டையே அழிவுக்குக் கொண்டுவரக் காரணமான 20க்கு கைதூக்கியவர்கள் குடும்பம் சகிதம் இலவசமாக அந்தப் பயணத்தில் போய்வர வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியாகும்.

ஜம்மியத்துல் உலமா கூட பணத்துக்கும் அரசியலுக்கும் வளைந்து கொடுத்து விடும். பொருளாதார விற்பண்ணர்களே ராஜபக்ஸாக்கள்தான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று சொல்ல. இல்லை கொரோனாதான் காரணம் என்று தலைவரை வைத்துக் கதை சென்ன  சபை இது விடயத்தில் நியாயம் செல்லாது.

இந்த நாட்டில் இறைவனுக்குப் பயந்த உலமாக்களிடம் நாம் எழுப்பும் கேள்வி இது புனிதப் பயணமாக கருதப்படுமா என்பதுதான்.

கதை உண்மையாக இருந்தால் இப்படி போகும் பத்து வரையிலானவர்கள் விடயத்தில் அல்லாஹ்தான்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும். யாரந்தக் கருப்பாடுகள்! அவற்றைக் கட்டிப் போடுங்கள்.

 

 

Previous Story

உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கையில்,  IMFஐ எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி

Next Story

'ஒரு இதயத்தின் உளறல்'