2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள்

பிரிட்டன் நாட்டில் பெண் ஒருவர் வீட்டிலேயே சுமார் இரண்டு ஆண்டுகள் உயிரிழந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வீடுகளில் நாம் வாடகைக்கு இருந்தால் அவ்வப்போது ஓனர் வீட்டுக்கு வந்து செக் செய்யும் சம்பவங்கள் நடக்கும்.

இதை வாடகைக்கு இருப்பவர்கள் பெரும்பாலும் ஒரு தொல்லையாகவே பார்ப்பார்கள்.  இதனிடையே பிரிட்டன் நாட்டில் பிளாட் ஒன்றில் நடந்துள்ள சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை பிளாட்டில் உள்ளவர்களுக்கே கூட கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

பிரிட்டன் பிரிட்டன் நாட்டில் அமைந்துள்ள பிளாட் நிர்வாகம் ஒன்றில் பெண் இறந்தது கூட தெரியாமல் இருந்துள்ளது. இதை விடக் கொடுமை என்னவென்றால் அதற்காக இரண்டு ஆண்டுகள் வாடகையும் வசூலித்து வந்துள்ளனர். இது எப்படி சாத்தியம் எனக் கேட்கிறீர்களா வாங்கப் பார்க்கலாம்!.

பிரிட்டன் நாட்டின் பெக்காம் பகுதியில் 58 வயதான ஷீலா செலியோனே வசித்து வருகிறார். எலும்புக் கூடு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இருப்பினும், இரவு நேரங்களில் இவர் வெளியே சென்று வரலாம் என்று அக்கம் பக்கத்தினர் கருதி அப்படியே விட்டுவிட்டனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், ஏன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை என்ற சந்தேகம் அக்கம் பக்கத்தினருக்கு வந்துள்ளது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது 58 வயதான ஷீலா செலியோனே வீட்டில் சோபாவில் எலும்புக்கூடுகளாகவே கண்டுபிடிக்கப்பட்டார்.

எப்படி உயிரிழந்தார் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஹவுசிங் சொசைட்டி போர்டு மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. ஷீலா செலியோனேவின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால், அவர் உயிரிழந்ததற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை.

இருப்பினும், அந்தப் பெண் கிரோன் நோய் மற்றும் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2018ஆம் ஆண்டு ஷீலா செலியோனே எந்தக் காரணத்திற்காக உயிரிழந்து இருந்தாலும், சுமார் இரண்டு ஆண்டுகளாக இது அக்கம்பக்கத்தினருக்குத் தெரியாமல் இருப்பதைப் புரிந்துகொள்ளச் சற்று கடினமாகவே உள்ளதாக விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஷீலா செலியோன் கடைசியாக ஆகஸ்ட் 2019இல் மருத்துவரைப் பார்க்க வெளியே சென்ற சமயத்தில் அவர் வெளியே உயிருடன் காணப்பட்டு இருக்கிறார். வாடகை பிளாட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒருவர் இறந்து கிடப்பதை இரண்டு ஆண்டுகளாகக் கண்டுபிடிக்காமல் இருந்தது குறித்தும் விசாரணைக் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

அதேநேரம் அந்தப் பெண் இருந்த வீட்டிற்கான வாடகையை இரு ஆண்டுகளாக அவர்கள் வசூலித்தே வந்துள்ளனர். முதல் சில மாதங்கள் அவரிடம் இருந்து வாடகை வராததால் அரசின் உதவி திட்ட்ததில் இருந்து வாடகையைப் பெறத் தொடங்கி உள்ளனர் அந்த வீட்டினர் ஓனர்கள்.

போலீசார் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே அவரது வீட்டை செக் செய்ய முயன்றபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லையாம். இதனால் அவரது வீட்டிற்கு வழங்கப்பட்ட கேஸ் இணைப்பை நிறுத்தி உள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினர் அவரது வீடு தொடர்ந்து பூட்டப்பட்டு இருப்பது தொடர்பாக பிளாட் சங்கத்தையும் போலீசாரையும் தொடர்பு கொண்டு இருக்கின்றனர்.

போலீசாரும் கூட அங்கு இரண்டு முறை சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு எதோ தவறு நடக்கவே ஷீலா செலியோனே உயிருடன் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படாமல் போனது.

Previous Story

பிரிட்டன் பிரதமர்: ரேசில் முந்தும் லிஸ் டிரஸ்...      ரிஷி சுனக் பின்னடைவு!

Next Story

18 புதிய  அமைச்சர்கள் விபரம்