2 வயது  கேகாலை-தல்கஸ்பிடிய சிறுவனின் உலக சாதனை! 

கேகாலை-தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம்  கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில்தனது பெயரை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், பெருமை சேர்த்துள்ளார்.

அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது சிறுவன் எனும் உலக அந்தஸ்தை அச்சிறுவன் தனதாக்கிகொண்டார்.

இரு வயதில் சாதனை

ஏற்கனவே இதே சாதனையை நிகழ்த்தி ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்ததுடன் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தற்போது இவருக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு வந்து சேர்ந்துள்ளன.

முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பது விசேட அம்சமாகும்.

மேலும் இந்த குழந்தை சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Previous Story

மரண தண்டனை கைதி விடுதலை -இலஞ்சம் 800 கோடி ரூபா.  பெற்றது?

Next Story

மைத்திரி-அத்துரலியே லடாய்