அமெரிக்கா VS ஈரான் ஏட்டிக்குப் போட்டி!

-யூனுஸ் என் யூசுப்-

விளையாட்டு உபகரணங்களை உற்பத்தி செய்வது போல இன்று ஈரான் தினந்தோரும் புதிய புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து காட்சிப்படுத்தி வருகின்றது. முன்பு வட கொரியாவும் இப்படித்தான் நடந்து கொண்டு வந்தது. அமெரிக்கா என்னதான் மிரட்டிப் பார்த்தாலும் வட கொரிய தனது ஆயுத கண்டு பிடிப்புக்களை நிறுத்திக் கொள்ளவில்லை.

Why Iran Matters For American National Interest | Hoover Institution Why Iran Matters For American National Interest

அதே பாணியில் தற்போது ஈரானும் அமெரிக்காவுக்கு ஏரிச்சல் ஊட்டும் வகையில் தனது நவீன ஆயுதங்கள் பரீட்சித்து வருகின்றது. ஈரான் தூர இலக்கு ஏவுகணைகள் பரிசோதனை செய்வதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தலைமையிலான நேட்டே நாடுகள் சில மணி நேரத்துக்கு முன்னர் எச்சரித்திருந்த போது.

ஆம் நாங்கள் கண்டம் விட்டு கண்டம் பாய்கின்ற ஏவுகணைகளை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கின்றோம் உன்னால் முடிந்ததை செய்து பார் என்று அமெரிக்hவையே ஈரான் மிரட்டிக் கொண்டிருக்கின்றது.

The US-Iran conflict and its effect on international law - iPleaders

ஈரான் இப்படி எல்லாம் நடந்து கொள்வது உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஈரானின் இந்த நடவடிக்கைகளினால் இஸ்ரோலுக்கு இன்று பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பது மிகத் தெளிவு.

தற்போது ஈரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக சீண்டிப் பார்க்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் இன்று இஸ்ரோல் நிதானத்துடன் நடந்து கொள்கின்றது.

நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பிரான்ஸ் போலீஸால் கொல்லப்பட்ட  நஹெல் யார்? 

Next Story

மோடியை ரணில் ஏமாற்றுவார்!