வானியல் ஆர்வலர்கள் விளக்கம்
***********
சவுதி அரேபியாவில் ஷவ்வால் 1446 மாதத்திற்கான பிறை (29.03.2025) காணப்பட்டது.
***********
இஸ்லாமிய காலண்டரின்படி வரும் 31ம் தேதி ரம்ஸான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆனால் ரம்ஸான் பண்டிகை என்பது பொதுவாக பிறை தெரிவதன் அடிப்படையில் ஒருநாள் முன்பு அல்லது ஒரு நாளைக்குபிறகு கூட கொண்டாடப்படும்.
அந்த வகையில் சவுதி அரேபியாவில் இன்று முதல் பிறை பார்க்கப்பட உள்ளது. அங்கு எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் முக்கிய தகவலை தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஸான் உள்ளது.
தற்போது ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். நாள் முழுவதும் அவர்கள் உணவு உண்ணாமல் உடலை வருத்தி நோன்பு பின்பற்றி வருகின்றனர். ரமலான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உணவு எடுத்து கொள்வது இல்லை.
அதன்பிறகு தினமும் இஃப்தார் விருந்துடன் நோன்பை முடிப்பார்கள். தற்போது இஸ்லாமியர்களின் நோன்பு காலம் முடிவுக்கு வர உள்ளது. இஸ்லாமியர்களின் காலண்டரின்படி மார்ச் 31ம் தேதி ரம்ஸான் கொண்டாடப்பட உள்ளது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் ரம்ஸான் தேதி என்பது மாற்றமடையும். வானில் பிறை தெரிவதன் அடிப்படையில் தான் ரம்ஸான் தேதி என்பது நிர்ணயம் செய்யப்படும்.
அதன்படி பார்த்தால் இந்த ஆண்டும் ரம்ஸான் பண்டிகைக்கான பிறை எப்போது தெரியும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவில் தான் மக்கா மற்றும் மதீனா உள்ளிட்ட இடங்கள் உள்ளன. இஸ்லாமியர்களில் ஒருபகுதியினர் சவுதி அரேபியாவில் தெரியும் பிறையின் அடிப்படையில் ரம்ஸான் கொண்டாடி வருகின்றனர்.
இதனால் தற்போது சவுதி அரேபியாவில் எப்போது பிறை தெரியும்? என்பது பற்றி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‛‛ஷவால் பிறை அடிப்படையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இந்த பிறை என்பது மார்ச் 29 (அதாவது இன்று) வானில் தெரியும். இன்று 2 மணிக்கு தெரிய தொடங்கும்.
சூரிய உதயத்துக்கு பிறகு 8 நிமிடங்கள் வரை இந்த பிறை இருக்கும். இதனால் சவுதி அரேபியாவில் ரம்ஸான் பண்டிகை என்பது மார்ச் 30ம் தேதி கொண்டாடப்பட வேண்டும். ஆனால் புதிய பிறை என்பது பூமியில் இருந்து பார்த்தால் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் டெலஸ்கோப் வழியாக கூட பார்க்க முடியாது.
இதனால் இன்று வானில் பிறை உருவானாலும் கண்களுக்கு தெரியாது. எனவே நாளைய தினம் பிறை தெரியும்” என கூறியுள்ளனர். அதாவது வானில் இன்று ஷவால் இஸ்லாமிய மாதத்துக்கான பிறை தோன்றினாலும் கூட அது நம் கண்களுக்கு தெரியாது.
இதனால் பிறை உருவாகவில்லை என்ற அடிப்படையில் நாளை பிறை பார்க்கப்படும். நாளை பிறை தெரியும்பட்சத்தில் நாளை மறுநாள் ரம்ஸான் பண்டிகை கொண்டாடப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் அவுதி அரேபியாவின் வானியல் ஆர்வலர்கள்.