–நஜீப்–
நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல்
அனுமான் நாட்டுக்குத் தீ முட்டிய கதைகள் நமது புராணங்களில் இருக்கின்றன. ஆனால் நாட்டையே இருளாக்கிய நவீன அனுமான் நமது காலத்தில் பார்க்க முடிந்தது.
அண்மையில் ழுழு நாட்டையுமே ஒரு குரங்கு இருளாக்கி விட்டது என்று துறைக்குப் பொறுப்பானவர்கள் சொன்ன கதைகள் சர்வதேச ஊடகங்களில் கூட பேசு பொருளாகி இருந்ததை பார்க்க முடிந்தது.
இப்படி ஒரு கதை உலகில் சொல்லப்பட்டது இதுதான் முதல் முறை. இந்தக் கதை அனுர அரசுக்கு ஒரு தலைகுனிவைக் கொடுத்தது என்பதுதான் எமது கருத்து.
அண்மையில் கண்டியில் உள்ள குரங்குகளைப் பிடித்து விக்டோரியா ஏரியில் உள்ள தீவுகளுக்கு கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிய வருகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.
ஒரு குரங்கு அணியில் ஏழு முதல் நூற்று ஐம்பது வரையிலான எண்ணிக்கை இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. கண்டியில் இது தீர்வு என்றால் ஏனைய இடங்களுக்கு என்னதான் பதில்.!