17பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனையில் ஈடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பணி இடைநீக்கம்

இந்நிலையில், போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்: வெளியான காரணம் | Drug Abuse 17 Police Officers Suspended

எனவே, போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தி அவர்களைப் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த நான்கு மாதங்களில் 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்திய ஹமாஸ்!

Next Story

1-வைத்தியமும் பைத்தியமும்! 2-ஆதரவும் எதிர்ப்பும்!