ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி-சாயிரா பானு

ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு பிரிவுக்கு என்ன காரணம்? என்பது பற்றி மனைவி சாயிரா பானு விளக்கம் தந்துள்ளார்.

AR Rahman divorce: AR Rahman and wife Saira part ways after 29 years of being together

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான். ‛ஆஸ்கர்’ விருது வென்ற இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார்.

ஏஆர் ரஹ்மானின் மனைவி பெயர் சாயிரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு கதிஷா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார்.

AR Rahman's Wife Saira Announces Separation After 29 Years Of Marriage Citing 'Significant Emotional Strain' | Times Now

இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, ஏஆர் ரஹ்மானின் மனைவி சாயிரா பானு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை.. பிரிவதாக அறிவித்த மனைவி சாயிரா பானு “திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாயிரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். உணர்ச்சிப்பூர்வ அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.

Previous Story

ராஜாங்க அமைச்சர்கள் இனி இல்லை! ஓரிரு நாட்களில் 26 - 28 துணை அமைச்சர்கள்

Next Story

பாரிய நிதி மோசடியில்  அரச அதிகாரிகள்!