18+ “லவ்” ஹோட்டல்கள்.. எல்லாம் “அந்த” விஷயத்திற்காக தான்.!

ஜப்பான் நாட்டில் பல அழகிய விஷயங்கள் இருக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், அங்கு வினோதமான “லவ்” ஹோட்டல்கள் உள்ளது பலருக்கும் தெரியாது. இளசுகளைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த லவ் ஹோட்டல்கள் என்றால் என்ன.. இதன் தனித்துவம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஜப்பான் என சொன்னதும் பலருக்கும் ஜப்பான் உணவுகள், அழகிய இயற்கை சூழல், சிலருக்கு ஜப்பான் கார்டூன்கள் கூட நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் ஜப்பான் என்பது அதையும் தாண்டி பல விஷயங்களை உள்ளடக்கியது.

காலையில் நீங்கள் ஜன நெருக்கடி மிகுந்த டோக்கியோ நகரில் இருக்கலாம்.. புல்லட் ரயிலில் ஏறி கொஞ்ச நேரம் பயணித்தால் மக்களே இல்லாத ஊருக்கும் கூடப் போகலாம்.

What is Japan s Love Hotels know about the Unique Themes and Cultural Insights

ஜப்பான்

இப்படிப் பல அதியசங்களை கொண்ட நாடாகவே ஜப்பான் இருக்கிறது. இத்தகைய அதிசயங்கள் மட்டுமில்லை.. பல வினோதங்களையும் கொண்ட நாடாக ஜப்பான் இருக்கிறது.

நீங்கள் யோசித்துக் கூட பார்க்காத பல விஷயங்கள் ஜப்பானில் இருக்கும். அதில் ஒன்று தான் “லவ்” ஹோட்டல்கள்.. அதென்ன லவ் ஹோட்டல் என உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஜப்பானில் உள்ள வினோதமான ஒரு கன்சப் தான் லவ் ஹோட்டல்கள். இளசுகள் முதல் பெரிசுகள் வரை “அந்தரங்கமாக” இருக்க இந்த லவ் ஹோட்டலை பயன்படுத்துவார்கள்.

இது ஏதோ ஓரிரு இடத்தில் மட்டும் இருக்கும் ஹோட்டல் இல்லை. ஜப்பான் முழுக்கவே பரவலாக கிட்டதட்ட எல்லா முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற ஹோட்டல்கள் உள்ளன.

வரலாறு

ஜப்பானில் இதன் தோற்றத்தைத் தெரிந்து கொள்ள நாம் 16ல் நூற்றாண்டில் இருந்த சூழலைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது ஜப்பானில் பொது இடங்களில் ஆண்-பெண் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே குற்றம் போலப் பார்க்கப்பட்டது.

அப்போது ஜப்பான் மட்டுமின்றி பல நாடுகளில் அதேதான் நிலைமை என்பது தனிக்கதை. ஆனால், ஜப்பானில் இதைச் சமாளிக்க அப்போது ஜப்பானில் முதல்முறையாக ரகசிய குடியிருப்புகள் தோன்றின. அதில் உள்ளே வரும் வழியும், வெளியே செல்லும் வழியும் யாருக்கும் தெரியாமல் மறைவாக இருக்கும்.

Israel laser weapon | Indian Army Bee Warriors | Ukraine Russia | ADB's aid to Pakistan | Nandhini

அதுவே மெல்ல மெல்ல மாறி இப்போது லவ் ஹோட்டல்களாக உருவெடுத்துள்ளன. இவை பெரும்பாலும் ஜப்பானில் கேளிக்கை விடுதிகள், பப்கள் அதிகம் உள்ள தெருக்களுக்கு அருகே தான் இருக்கும்.

அங்குச் செல்லும் இளசுகள் தான் பிரதான குறி! மேலும், வெளியே இருந்து பார்த்தால் அவை 18+ ஹோட்டல்கள் போலத் தெரியாது. வழக்கமான ஹோட்டல் போலவே தெரியும். ஆனால், உள்ளே போனால் எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.

ஆளே இருக்க மாட்டார்கள்

முதலில் உள்ளே பல ஹோட்டல்களில் ஊழியர்களே இருக்க மாட்டார்கள். நாம் ரூமை புக் செய்வது கூட ஆன்லைனில் செய்ய வேண்டும் அல்லது அங்கு கம்ப்யூட்டர் மெஷின் இருக்கும் அதில் நாமாக புக் செய்து கொள்ள வேண்டும்.

சில ஹோட்டல்களில் வரவேற்பாளர் இருப்பார். ஆனால், அவர்களால் நமது முகத்தைப் பார்க்க முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

மேலும், உள்ளே வரும்போதும் சரி, வெளியேறும்போதும் சரி மற்ற யாரையும் பார்த்துவிடாதபடி தனித்தனி வழிகளுடன் பக்காவாக இந்த ஹோட்டல்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

பார்க்க முடியாது

சாவியை வாங்கிக் கொண்டே ஹோட்டல் ரூமிற்கு போனால் அது வேறு விதமாக இருக்கும். இளசுகளுக்குத் தேவையான ஆணுறை தொடங்கி எல்லா பொருட்களையும் அங்கு வைத்திருப்பார்கள்.

நாம் யாரிடமும் சென்று எதுவும் கேட்கத் தேவையில்லை. அப்படியே உங்களுக்கு எதாவது தேவை என்றாலும் அங்கிருந்தபடியே ஆர்டர் செய்யலாம்.

ஹோட்டல் ஊழியர்கள் வந்து பேக்கேஜை தருவார்கள். அப்போதும் கூட அவர்களால் உங்களைப் பார்க்க முடியாதபடி தடுப்புகள் இருக்கும்.

எல்லாமே சீக்ரெட்

வெளியே செல்லும் போதும் கூட யாரும் பார்க்கக்கூடாது என்பதற்கு தனி வழி இருக்கும். ஜோடிகள் அந்த வழியிலேயே வெளியேறிவிடலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பானில் இதுபோன்ற லவ் ஹோட்டல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அங்குச் செல்வோரின் எண்ணிக்கையும் கூட கணிசமாக அதிகரித்துவிட்டது.

ஜப்பானில் இதற்குக் கிடைக்கும் வரவேற்பால் தாய்லாந்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த லவ் ஹோட்டல்கள் வர ஆரம்பித்துவிட்டன.

Previous Story

ராஜபக்ஸாக்கள் கொள்ளைகளும்.! எச்சில்களை உண்ணும் கூட்டமும்!

Next Story

'எண்ட் கேம்' ஆட்டத்தை தொடங்கிய ரஷ்யா..