உலக அரசியலே மாறப்போகுது.. ஈரான் கையில் “பயங்கர” தொழில்நுட்பம்.!

மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் ஈரான் நாட்டின் கையில் முக்கிய தொழில்நுட்பம் ஒன்று கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. பல்வேறு இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

Chilling warning as Iran 'develops terrifying hypersonic missile that can punch through ALL air defences', regime claims | The Irish Sun

உதாரணமாக பரம வைரிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றனர்.

ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.  இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.

Tasnim: Iran will receive Su-35 fighters from Russia in spring | Artsakhpress.am | Independent information agency of Artsakh

மாறும் அரசியல்

ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து ப்ராக்சி வார் செய்து கொண்டு இருக்கிறது. அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது.

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது. பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் – சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.கடந்த 7 வருடங்களுக்கு முன் இரண்டு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக தங்கள் உறவை முறித்துக்கொண்டன.

சவுதி அரேபியா மூலம் ஷியா தலைவர் நிமிர் அல் நிமிர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஈரானில் இருந்த சவுதி அரேபியா ராஜாங்க ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இந்த மோதலால் இரண்டு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக உறவை முறித்துக்கொண்டன. இந்த நிலையில் இவர்களுக்கு இடையிலான மோதல் என்பது சவுதி அரேபியாவில் ராஜாங்க ரீதியாக பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இரண்டு நாடுகளும் பல்வேறு பிராக்சி போர்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. சீனா இவர்களுக்கு இடையில் மத்தியச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. கடந்த 5 நாட்களாக இதற்காக பெய்ஜிங்கில் மத்தியச பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. மீண்டும் சேரும் நாடுகள்: அதன் முடிவாக தற்போது இரண்டு நாடுகளும் மீண்டும் உறவை தொடர்வதாக அறிவித்து உள்ளன.

அதாவது இரண்டு நாடுகளும் மாறி மாறி தூதரகங்களை திறக்கும். போன் மூலம் பேசுவதற்கான ஹாட் லைன் திறக்கப்படும். அதேபோல் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளும் இனி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே இரண்டு நாட்டிற்கும் இடையில் உறவு புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சவுதி மன்னர் சல்மான், மற்றும் முடி அரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு ஈரான் அழைப்பு விடுத்து உள்ளது. தங்கள் நாட்டிற்கு வரும்படி அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது . சவுதி ஈரானுடன் நெருக்கமானதை விரும்பாத அமெரிக்கா சிஐஏ அதிகாரிகளை சவுதிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Tasnim: Iran claims it has obtained supersonic cruise missile technology - Defence & Security Middle East

தொழில்நுட்பம்

மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் ஈரான் நாட்டின் கையில் முக்கிய தொழில்நுட்பம் ஒன்று கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. அதன்படி சூப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அது இன்னும் சோதனையில் உள்ளது, விரைவில் சோதனை வெற்றி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அரசின் அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளைகுடாவில் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கடந்த வாரம் 600 கிமீ தூர ஏவுகணைகளை ஈரான் சோதனை செய்தது. அவர்களிடம் சோனிக் ஏவுகணைகள் மட்டுமே இருந்த நிலையில் சூப்பர் சோனிக் வேகத்தை அடையும் ஏவுகணைகளை அந்நாட்டு அரசு உருவாக்கி உள்ளதாம். ஈரானின் பாதுகாப்பு சக்தியில் ஒரு புதிய அத்தியாயமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ராணுவ ரீதியாக ஈரானுக்கு இது புதிய பலத்தை வழங்கும் வாய்ப்புகள் உள்ளன.

Previous Story

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு: அடுத்தது என்ன?

Next Story

நாடாளுமன்றில் ஆண் விபச்சாரகர்!