13 வயதில் கர்ப்பம் . 40 வயதில் 44 குழந்தைகள்! ஆனா கணவரே இல்லையாம்! ம்

உகாண்டாவில் வசிக்கும் பெண் ஒருவர் வெறும் 40 வயதில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்து நெட்டிசன்களை மிரள வைத்துள்ளார். பெண் ஒருவர் கர்ப்பமாகும் போது, அவர்களின் உடலில் பல மாற்றங்கள் நடக்கும்.

குழந்தை பெற்றுக் கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கவே செய்யும்.  ஒரு முறை கர்ப்பமடைந்தாலும் பெண்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெண்கள் கர்ப்பமடையும் வயது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஆப்பிரிக்கா

A Woman From Uganda Who Gave Birth to 44 Children Reveals What Her Life Is Like

முன்பு பெண்கள் 20களில் குழந்தை பெற்று வந்த நிலையில் இப்போது அது 25+ ஆக மாறியுள்ளது. அதேநேரம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பெண்கள் கர்ப்பமடையும் சராசரி வயது இதைவிட அதிகம். அங்கே 35 வயதுக்குப் பின்னரே பெண்கள் கர்ப்பம் தரிக்க விரும்புவதாக ஆய்வுகள் கூறுகிறது.

நிலைமை இப்படி மாறிக் கொண்டிருக்க ஆப்பிரிக்காவில் பெண் ஒருவர் தனது 40 வயதிற்குள் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மரியம் நபடான்சி என்ற பெண்ணுக்கு இளம் வயதிலேயே திருமணமாகியுள்ளது. அவருக்கு முதலில் பிறந்ததே இரட்டை குழந்தை. முதல் இரட்டைக் குழந்தைகளை அவர் பெற்றெடுக்கும் போது அவருக்கு வயது வெறும் 13.

Ugandan Women at 40 Gave Birth to 44 Kids From One Man: Know Her Story

அவர் உலகின் மிகவும் fertile பெண்ணாகக் கருதப்படுகிறார். தொடர்ந்து கர்ப்பம்: கிழக்கு ஆபிரிக்காவின் உகாண்டாவில் தான் இந்த பெண் வசித்து வருகிறார். அங்கே உள்ளவர்கள் அனைவரும் இந்த பெண்ணை உகாண்டா தாய் என்றே அழைக்கின்றனர். அவருக்கு 12 வயது இருக்கும் போதே நபடான்சிக்கு திருமணம் நடந்துள்ளது.

அப்போது முதலே இந்த குழந்தை மாரத்தான் தொடங்கிவிட்டது. திருணமாகி ஒரே ஆண்டில் அவர் கர்ப்பம் தரித்துள்ளார்.  கர்ப்ப காலத்தில் அவருக்கு வயிறு பெரிதாகவே இருந்துள்ளது.  இதனால் அஞ்சிய அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது தான் அவர்களுக்கு இரட்டை குழந்தை இருப்பது தெரிய வந்தது. மேலும், நபடான்சி மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த போது, ​​அந்த பெண்ணுக்கு அசாதாரணமாகப் பெரிய கருப்பை இருப்பதாகச் சொன்னார்கள்.

இந்த நிலைக்கு ஹைப்பர்ஓவுலேஷன் என்று பெயராகும். இதுபோன்ற நிலையைக் கொண்டிருப்பவர்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அது மோசமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், ஒருபோதும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

மேலும், அவர் இப்படி உடனடியாக கருவுறப் பரம்பரையாக டிஎன்ஏவும் காரணம் என்று கண்டறியப்பட்டது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “அவருக்கு இருப்பது ஹைப்பர்-ஓவுலேட் என்ற நிலை. பொதுவாக ஒரு சுழற்சியில் ஒறு முட்டை மட்டுமே வரும். ஆனால், இதில் ஒரு சுழற்சியில் பல முட்டைகள் வெளியே வரும்.

இது கருவுறும் வாய்ப்புகளைக் கணிசமாக அதிகரிக்கிறது” என்று தெரிவித்தனர். 44 குழந்தைகள்: இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் அந்த பெண் தொடர்ச்சியாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்வதே ஒரே வழி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்போது 13 வயதில் தொடங்கிய, பிரசவ மாரத்தான் 40 ஆண்டுகள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது அந்த பெண்ணுக்கு 40 வயதாகும் நிலையில், அவர்களுக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது. இப்போது அவருக்கு நான்கு இரட்டையர்கள், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் என்பது 4 முறை பிறந்துள்ளது.

ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது அவருக்கு இருக்கும் ஹைப்பர்-ஓவுலேட் என்ற நிலையே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு மொத்தம் 44 குழந்தைகளைப் பிறந்திருந்தாலும் கூட 6 குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது.

இப்போது அவருக்கு 20 சிறுவர்களும் 18 சிறுமிகளும் மட்டுமே இருக்கிறார்கள். கணவரும் இல்லை: நபடான்சி , இப்போது சிங்கிள் மதராக இருப்பதால் அவருக்குக் குழந்தைகளை வளர்ப்பது கடினமாக இருக்கிறதாம். அவரது கணவர் சொத்துகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதால் இந்த மோசமான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்.

Previous Story

நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிய முடியாத நிலை

Next Story

புதிய உள்ளூராட்சி நகல் அறிக்கை: சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வழிகாட்டல்!