மணிப்பூரில் ஆடைகள் களையப்பட்ட பெண்கள்: காணொளியை பகிர வேண்டாம்-அரசாங்கம்!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை பகிர வேண்டாம் என இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு பழங்குடியின பெண்களை ஆடைகளை களைத்து, கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பேரணியின் போது மோதல்

மணிப்பூரில் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்: காணொளி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு | Dont Share Manipuri Incident Video Order Issued

கடந்த மே மாதம் 3ஆம் திகதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றிருந்தது. இந்த பேரணியின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பின்னர் அது வன்முறையாக வெடித்தது.

வன்முறையின் தொடர்ச்சியாக, குறித்த பெண்கள் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பதிவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் சம்பத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறான சூழலிலேயே மணிப்பூர் சம்பவம் தொடர்பான குறித்த காணொளிகளை பகிர வேண்டாம் என டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Previous Story

ரணில் நாளை இந்தியா பயணம்

Next Story

உயிர் கொல்லி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்