தமிழ் மொழியிலான செவ்விக்கு ஜனாதிபதி ரணிலுக்கு பகிரங்க அழைப்பு!

மேன்மை தங்கிய
ரணில் விக்ரமசிங்ஹ
இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசு ஜனாதிபதி
ஜனாதிபதி செயலகம்
காலிமுகத்திடல் மத்திய றோட்
கொழும்பு-1

தமிழ் மொழியில் செவ்விக்கான பகிரங்க அழைப்பு!

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே!

தாங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்சில் நடத்திய ஒரு ஊடகச் சத்திப்பில் உங்களுக்குத் தமிழில் மொழியில் இருக்கின்ற புலமை பற்றி நீங்கள் சொல்லிய பின்னரே தனக்கு அறிந்து கொள்ள முடிந்தது. அது குறித்து மிகவும் மகழ்ச்சியாகவும் இருந்தது.

எனவே தமிழ் மொழியிலான Srilankaguardiannews.com என்ற இணையத் தளத்துக்குத் தங்களிடமிருந்து நேரடியாக செவ்வியொன்றைப் பெற்றுக் கொள்ள ஊடகக்காரன் என்றவகையில் நான் மிகுந்த ஆர்வத்துடனும் ஆவலுடனும் இருக்கின்றேன். மேலும் ஸ்ரீ லங்கா ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் வழங்கிய செவ்வியாகவும் இது பதிவாகும்.

எனவே இதற்கான சந்தர்ப்பத்தை எனக்குத் தந்துதவுமாறு வினையமாகக் கேட்டுக் கொள்கின்றேன். மேற்படி இணையத் தளத்தில் பிரதம ஆசிரியராக இருக்கும் நான் தேசிய பத்திரிகைகளின் ஆயிரக்கணக்கான அரசியல் தொடர்பான கட்டுரைகளை இதுவரையிலும் எழுதி இருக்கின்றேன் என்பதனையும் தாங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

இதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்குவீர்களாக இருந்தால் இது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் அமைய இருப்பதால், இந்த நிகழ்வின் போது உள்நாட்டு சர்வதேச ஊடகங்களையும் அந்த நிகழ்வுக்கு அழைத்துவர வாய்ப்பளித்தால் மேலும் நன்றியுடையவனாக இருப்பேன்.

மிக்க நன்றி

தங்களின் பதிலை
ஆவலுடன்
எதிர்பார்க்கும்

(நஜீப் பின் கபூர்)

பிரதிகள்.
1.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளம்.
2.ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B. ஏகநாயக்க
3.ஜனாதிபதி செயலகப் பிரதானி சாகல ரத்னயக்க

Previous Story

புதினை சந்தித்த 8 வயது சிறுமி - ஒரு சுவாரஸ்யம்

Next Story

மஹர பள்ளிவாசல்: புதிய காணி வழங்குங்கள் - இம்ரான் மகரூப் MP