11 மாணவர்கள் கொலை! அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மைகள்- பொன்சேகா

இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அட்டூழியங்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

”கொலை செய்யப்பட்ட 11 பேரில் ஒரு மாணவன் சிங்களவர் ஒருவர் முஸ்லிம் ஏனைய 9 பேர் தமிழர்கள். சிங்கள மாணவனின் அம்மா தமிழ்,அந்த மாணவன் இரு தினங்களில் இங்கிலாந்து பல்கலைக்கழத்திற்கு செல்லவிருந்தவர்.

கடத்தி கொலை செய்யப்பட்ட 11 மாணவர்கள்! அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மைகளை அம்பலப்படுத்திய பொன்சேகா | Sarath Fonseka Wasantha Karannagoda Chinnaiah

வசந்த கரன்னாகொட கீழ் இயங்கிய குழுவே அவர்களை கடத்தி திருகோணமலை கடற்படைத்தளத்தில் வைத்திருந்தனர். இவர்களிடம் கப்பம் பெற்றுக் கொண்டது மட்டுமல்ல கொலையும் செய்துள்ளனர்.

இந்த அட்டூழியங்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்.

நான் இராணுத் தளபதியாக பதியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது கரன்னாகொட,’புலிகளுக்கு ஆயுதங்கள் கடலில் வருவதில்லை.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு அதுவும் பெரிய ஆயுதங்களான ஆட்லறிகள் தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வவுனியாவில் இருந்த காலரண்களில் இருக்கும் இராணுவத்தினர் பொலிஸாருக்கு கப்பம் கொடுத்து மாற்றப்படுவதாக தெரிவித்தார்.

பெரும் வாக்குவாதம்

நான் அச்சந்தர்ப்பத்தில் பெரும் வாக்குவாதப்பட்டேன்.கடுமையாக அதை எதிர்த்தேன்.

அத்துடன் மைத்ரிபால ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் துணை அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா கடற்படை தளபதியாக இருந்தார். அவர் நான் கண்ட சிரேஷ்ட கடற்படைத் தளபதி, நல்ல திறமைசாலி மற்றும் நல்ல மனிதர்.

கடத்தி கொலை செய்யப்பட்ட 11 மாணவர்கள்! அதிர்ச்சிக்குள்ளாக்கும் உண்மைகளை அம்பலப்படுத்திய பொன்சேகா | Sarath Fonseka Wasantha Karannagoda Chinnaiah

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கூட பொறுத்தப்படாத கப்பல் ஒன்றை 167 மில்லியன் டொலருக்கு வாங்குவதற்கு முயற்சித்த போது சின்னையா எதிர்த்தார்.

அதனால் அவரை இரண்டு மாதங்களில் மைத்ரிபால வீட்டுக்கு அனுப்பினார். ஆனால் அந்த கப்பலை ஆயுதங்களுடன் வியட்நாம் 120 மில்லியன் டொலருக்கு வாங்கியது.

இவ்வாறான நிலையிலேயே மைத்திரி என்னையும் ஒதுக்கி வைத்தார்.இவ்வாறான உறுதியற்ற தலைமை இருந்த சூழலே ஈஸ்டர் தாக்குதலுக்கும் வழிசமைத்தது”என கூறியுள்ளார்.

Previous Story

வடிவேலுவின் மிரள வைக்கும் காமெடி சீன்

Next Story

ஐநா அலுவலகத்தை  கட்டுப்பாட்டில் எடுத்தது ஹவுதி அமைப்பு!